புராணப்போதை ஆம்! ஆச்சாரியார், கேட்டார், 'என் மீது நம்பிக்கை யிருந்தால் காங்கிரசுக்கு ஓட்டுப் போடுங்கள்! காங்கிரஸ் வெற்றிபெறும்படி செய்யுங்கள்' என்று. மக்களோ, 'உம்மீது நம்பிக்கை யில்லை,' யென்று அவரது வினாவுக்கு விடையளித்து விட்டனர், காங்கிர சைத் தோற்கடித்ததன் மூலம். கண்ணிய மிக்கவராக இருந்தால் செய்திருக்க வேண்டியது என்ன? ஆச்சாரியார் தாமே வலியக் கூறிக்கொண்ட ஒரு அறை கூவ லுக்கு அடிபணிய வேண்டியவர் தானே ஆச்சாரியார்? செய்தாரா? செய்வாரா? அவராகக் கூறிக்கொண்டார். அவராகவே சவால் விடுத்தார் மக்களைப் பார்த்து, 'என்மீது நம்பிக்கை தெரி விக்கக் காங்கிரசைக் காப்பாற்றுங்கள் - காங்கிரஸ் கட்சி யின் அபேட்சகரை வெற்றிப்பெறச் செய்யுங்கள் " என்று. வெற்றி கிட்டியிருந்தால், என்ன நிலை, இருக்கும், நாட்டில்? ஏகோபித்து, அவரும் அவரது சீடகோடிகளும், அவரையும் அவர் சார்ந்துள்ள காங்கிரசையும் தாங்கி யுள்ள பத்திரிகைகளும் பலபடப் பேசிப் பேசி, எழுதி எழுதிப் பெருமைப்பட மாட்டார்களா? 'பாருங்கள் என்மீது நம்பிக்கை யிருக்கிறது என்ப தைக் காட்டுங்கள் என்றேன். ஆம் என்று காட்டிவிட் டார்கள்.' என்று மாற்றுக் கட்சியினரையும் மற்றவரை 22
பக்கம்:புராணப்போதை.pdf/23
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை