பக்கம்:புராணப்போதை.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கருணாநிதி யும் பார்த்து எத்தனை விதங்களே, கூறியிருப்பார். அன் பர் ஆச்சாரியார்? 'காங்கிரஸ்தான், நாட்டு மக்களின் ஏகோபித்த பிரதிநிதி' என்று பத்திரிகைகளில் பக்கம் பக்கமாகப் பெரிய எழுத்துக்களிலே போட்டுக் காட்டிடத் தவற மாட்டார்களே! நிலைமை, அன்பர் ஆச்சாரியார், நிச்சயமாக எதிர் பார்த்ததற்கு எதிரிடையாக மாறிவிட்டது - காங்கிரஸ் தோற்றது. காங்கிரஸ் அபேட்சகர் தோற்கடிக்கப் பட்டார். அருப்புக்கோட்டையிலே! ஆச்சாரியார் என்ன செய்தார், அருப்புக்கோட் டைத் தீர்ப்பு வெளியானதும், தெரிவிக்கப்பட்டதும். தமது பிரதமர் பதவியை விட்டு வெளியேறினாரா. தாமே அறைகூவல் விடுத்துக்கொண்டபடி? காங்கிர சிடம் மக்களுக்கு நம்பிக்கை இல்லை என்பதை ஒப்பி னாரா, அவரே கற்பித்துக் கூறிய பகிரங்கப் பொது மேடைப் பேச்சுப்படி? ஏதும் இல்லை; இவை எதையும் செய்யவில்லை. பேசவுமில்லை ஆச்சாரியார். அருப்புக்கோட்டையிலே மூக்கறுபட்டதுபோன்ற நிலை ஏற்பட்டதும், ஆச்சாரியார், புதிய முறையிலே, தனது சாணக்கியத் தந்திரத்தைக் கையாண்டு தம்மிடம் மக்கள், நாட்டு மக்கள் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் என்பதைக் காட்டிக்கொள்ள முயற்சி செய்தார். 23

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புராணப்போதை.pdf/24&oldid=1706073" இலிருந்து மீள்விக்கப்பட்டது