பக்கம்:புராணப்போதை.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புராணப்போதை ஆச்சாரியார். சட்டசபையை, சென்னை மாகாண சட்டசபையைக் கூட்டி வைத்து, அதிலே ஒரு நம்பிக் கைத் தீர்மானம் கொண்டு வந்தார். அதாவது, ஆச்சாரியார்மீதும், அவரது மந்திரி சபையின்மீதும் முழு நம்பிக்கை இருப்பதாகச் சட்ட சபையில் தீர்மானம் கொண்டுவந்து, நிறைவேற்றிக் கொண்டார். வழக்கமாகத் தீர்மானங்கள், ஆளும் கட்சியைச் சார்ந்த ஆச்சாரியாரோ, அவரது சகாக்களோ கொண்டு வந்து நிறைவேற்றிடும் தீர்மானங்களைப் போலவே இந்த நம்பிக்கைத் தீர்மானமும் நிறைவேறியது. நிறை வேற்றிக் கொள்ளப்பட்டது. சென்னை சட்டசபையில். இதன்மூலம் ஆச்சாரியார், நாட்டு மக்களின் பிரதிநிதிகளைக் கொண்ட சட்டசபை உறுப்பினர்களின் பெரும் பான்மையினரின் நம்பிக்கையைத் தீர்மானம் மூலம் பெற்றுவிட்டதாகப் பறைசாற்றிக் கொண்டிட நல்லதொரு வாய்ப்பு கிடைத்தது. என்னிடம் நம்பிக்கை இருக்கிறது என்று நாட்டின ரின் பிரதிநிதிகள், சட்டசபை உறுப்பினர்களில் பெரும் பாலோர் உறுதி கூறியுள்ளனர்- என்று கூறிக்கொண்டு, அருப்புக்கோட்டையிலே கிடைத்த, தாமாகத் தேடிக் கொண்ட அதிர்ச்சியை, அறைகூவலின் விளைவால் ஏற்பட்ட அவமானத்தைத் துடைத்துக்கொண்டதாக ஆச்சாரியார் நினைத்தார் - நிறைவேற்றிக்கொண்டார். நம்பிக்கைத் தீர்மானத்தை, சட்டசபையில். 24

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புராணப்போதை.pdf/25&oldid=1706074" இலிருந்து மீள்விக்கப்பட்டது