புராணப்போதை இத்தகையோர்களைக் கொண்ட சட்டசபையில் தன்னிடம் நம்பிக்கை கோரித் தீர்மானம் கொண்டு வந்தார், ஆச்சாரியார். நிறைவேறியதில் வியப்பென்ன? இதைக் கொண்டு ஆச்சாரியார்,அருப்புக்கோட்டை யிலே, நம்பிக்கை தெரிவிக்கப்படவில்லையானால் என்ன, நாட்டின் பிரதிநிதிகளில் பலர் என்பக்கந்தானே, நாட் டிற்கு நம்பிக்கை யுள்ளவனாகத்தான் நான் ஒப்புக் கொள்ளப்பட்டேன் நாடாளும் சட்டசபையிலேயே என்று வீரம் பேசுகிறார், வெற்றி முரசு கொட்டுகிறார். நம்பிக்கை, மக்களிடமிருந்து, ஒரு குறிப்பிட்ட பிரச்னையை அவர்மீது நம்பிக்கைத் தெரிவிக்கத் தேர்தலில், அருப்புக்கோட்டைத் தொகுதித் தேர்தலில், காங்கிரசுக்கு ஓட்டுபோட்டு, மாட்டுப் பெட்டியை நிரப்பி, காங்கிரசை வெற்றிபெறச் செய்திடுவதிலே தான் இருக்கிறது என்று அறைகூவல் விட்ட ஆச்சாரி யார், அதிலே தாம் தோல்வியுற்றது கண்டு, வேறு வழியிலே, நம்பிக்கைத் தெரிவித்துக்கொண்டேன் பார்' என்று கொக்கரித்துக் கும்மாள மடிக்கிறார்? நம்பிக்கை கேட்டபோது. கேட்ட மக்களிட மிருந்து கிடைக்கவில்லை, அவரே கூறிக்கொண்டபடி? இதை ஒப்பாது,தாமே ஏற்படுத்திய அறைகூவ லின் விளைவை, முடிவை ஏற்காது, வேறு வழியில் தன்னைத்தான் பெருமைப் படுத்திக் காட்டிக்கொள் கிறார், ஆச்சாரியார்! 26
பக்கம்:புராணப்போதை.pdf/27
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை