பக்கம்:புராணப்போதை.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கருணாநிதி சர்தார் வல்லபாய் படேல் அவர்கள் இறந்ததும், அவர் வகித்து வந்த உள்நாட்டிலாகா மந்திரி பதவி தரப்பட்டது, ஆச்சாரியாருக்கு. சென்ற ஐந்து வருட காலத்தில், ஆச்சாரியார் மேற்குறிப்பிட்ட பதவிகளை யெல்லாம் பெற்றார். கடைசியாக அவர், மத்திய சர்க்காரில் உள்நாட் டிலாகா மந்திரியாக இருந்தபோது, மீண்டும் நாடெங் கும் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இந்தச் சமயம் பார்த்து ஆச்சாரியார், தமது மத்திய சர்க்கார் மந்திரி பதவியைத் தாமே வேண்டாமென்று கூறிவிட்டுச் சென்னைக்குத் திரும்பி குற்றாலம் சென்று. குளுமையான வாசத்தை மேற்கொண்டு பஜகோவிந்தம் எழுதிக்கொண் டிருந்தார். ஆச்சாரியார் தாம் அரசியல் துறவு பூண்டுவிட்ட தாக அறிவித்து விட்டே, பொது வாழ்விலிருந்து, அரசியலிலிருந்து மந்திரி பதவியிலிருந்து தாமே விலகிக் கொண்டார் என்பது நாடறிந்த உண்மையாகும். ஆச்சாரியார் பொதுத் தேர்தலிலே பங்குகொள்ள வில்லை. பலர் கேட்டுக்கொண்டும், பலப்பல காங்கிரஸ் காரர்கள் கேட்டுக்கொண்டும். முடியாது என்று மறுத்துவிட்டுக் குற்றாலம் போய்விட்டார். இந்த நிலையில் நாட்டில் பொதுத் தேர்தல் நடந்து முடிந்துவிட்டது. 29

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புராணப்போதை.pdf/30&oldid=1706079" இலிருந்து மீள்விக்கப்பட்டது