பக்கம்:புராணப்போதை.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புராணப்போதை இந்தத் தேர்தலின் முடிவுப்படி, காங்கிரசின் பேரால் தேர்தலுக்கு நின்று வெற்றி பெற்றவர் தொகையானது மிகவும் குறைந்ததாக இருந்தது. சென்னையில் மந்திரி சபை அமைத்திடுவதற்குப் போதுமான பலம், மெஜாரிட்டி பலம் காங்கிரஸ் கட்சிக்கு இல்லாது போய்விட்டது. இத்தகைய சங்கடமான நிலையைத் தவிர்த்து, மீண்டும் காங்கிரஸ் கட்சியின் ஆட்சியையே சென்னை ஆ யில் ஏற்படுத்திட வேண்டுமென்று காங்கிரஸ் கட்சி யினரும், அதனது ஆதரவாளர்களும் துடிதுடித்தனர். மெஜாரிட்டியற்ற கட்சி மந்திரி சபையை அமைக்க முடியாதே? என்ன செய்வது என ஏங்கினர். தவித்த னர் காங்கிரஸார், சென்னையில் தமது சட்டசபைக் கட்சியின் அங்கத்தினர்களின் எண்ணிக்கையைப் பார்த்து. காங்கிரசின் கண்ணியத்தைக் காப்பாற்றிட வேண்டுமானால் சென்னையில், காங்கிரஸ் கட்சி மந்திரி சபையை அமைத்தாக வேண்டும். காங்கிரஸ் கட்சி மந்திரி சபையை அமைத்தாக வேண்டுமானால், அதற்குப் பலம், மேலும் புதுபலம், கூட்டுப்பலம், ஆள்பலம், கட்சியின் அங்கத்தினரின் தொகையைப் பெருக்கிப் பலம் தேடியாக வேண்டும் என்ற நிலை! இப்போது மீண்டும் ஆச்சாரியாரின் பெயர் பல மாகப் பேசப்பட்டது, பலராலும். 30

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புராணப்போதை.pdf/31&oldid=1706080" இலிருந்து மீள்விக்கப்பட்டது