கருணாநிதி சென்னை சட்டசபையின் காங்கிரஸ் கட்சியின், தலைவராக ஆச்சாரியாரைத் தேர்ந்தெடுத்து விட்டால், நிலைமையை ஆச்சாரியார் எப்படியாவது தமது சாமர்த் திய, தந்திர உபாயங்களால் சமாளித்து காங்கிரஸ் மந்திரி சபையை அமைத்துவிடுவார் என்று பேசினர்- பறைசாற்றினர், ஆச்சாரியாரின் அடிவருடிகளும், ஆதர வற்ற காங்கிரஸ்காரர்களும். காங்கிரஸ் தலைவர்கள் சிலர் ஆச்சாரியாரிடம் சென்று வேண்டினர், சட்டசபைக் காங்கிரஸ் கட்சியின் த தலைமையை ஏற்று காங்கிரஸ் மந்திரி சபையை அமைத் திடும்படி. இதற்கு ஆச்சாரியார், தனிப்பட்ட முறையிலே ஒருசில காங்கிரஸ்காரர்களும் தலைவர்களும் கேட்டால் நான் என்ன சொல்வது? நானோ, அரசியல் துறவறம் பூண்டுள்ளேன். இந்த வேண்டுகோள் சட்டசபை காங்கிரஸ் கட்சியினரின் கூட்டத்தில் அவர்களால் நிறைவேற்றப்பட்ட ஒரு தீர்மான வடிவில் வந்தால், அல்லவா முறை என்று அனுப்பிவிட்டார். இதன்படி, ஆச்சாரியைச் சட்டசபைக் காங்கிரஸ் கட்சியின் தலைமையை ஏற்க வேண்டிடும் தீர்மான மொன்றும் சட்டசபைக் காங்கிரஸ் கட்சியினரால் நிறைவேற்றப்பட்டு ஆச்சாரியாருக்கு அனுப்பப்பட்டு விட்டது. இதுவும் போதாதென்று, மேலிடத்தாருக்கு இது சம்மதமா. அவர்களும் என்னை விரும்புகின்றார்களா 31
பக்கம்:புராணப்போதை.pdf/32
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை