பக்கம்:புராணப்போதை.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புராணப்போதை இந்தக் காரணங்கள் மறைந்துபோய்விட்டதோ, என்று கேட்கவேண்டி யிருக்கிறதே அன்பர் ஆச்சாரியாரைப் பார்த்து! டி தேர்தல் என்ன, அப்படி ஒரு பெரிய போராட் டமா. போர் வீரர்களைத் திரட்டி, பயிற்சி யளித்து, அணிவகுப்புகள் நடத்தி முகாம் அமைத்துப் பாய்ந் திட! ஏன் ஆச்சாரியார் தேர்தலுக்கு நிற்கப் பயப்பட வேண்டும்? ஜனநாயக முறைப்படி ஆச்சாரியார். ஏதாவது ஒரு தொகுதியிலே தேர்தலுக்கு நின்று, அதுவும் காங்கிரஸ் கட்சியின் பேரால் நின்று வெற்றி பெற்றுத் தானே சட்டசபைக்குள் வரவேண்டும்? அது முடியாது என்று, வயதைக் காரணங் காட். டிடுவது விவேக மல்லவே; விளக்கமாகவும் இல்லை பொருத்தமாகவும் இல்லையே! தேர்தல் என்பது என்ன? சடுகுடு விளையாட்டா? தேகபலமும், வாலிப வயதும் தேவைப்பட! தேர்தல் என்பது ஒரு குஸ்திப் பந்தயமா, கிங்காங் கிற்கும் தாராசிங்கிற்கும் நடப்பதைப்போல, சமபலத் தையும் ஓரளவு வயதையும் கவனித்திட! தேர்தலில் வயது அதிகம் ஆகிவிட்ட காரணத்திற் காக நின்று, வேலை செய்து, அலுப்படைய முடியாத நிலையில் இருக்கும் குடுகுடு கிழவரானால், இவர் நாட்டை எப்படிப் பரிபாலிக்க முடியும் என்று என் கேட்கக்கூடாது. 34

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புராணப்போதை.pdf/35&oldid=1706084" இலிருந்து மீள்விக்கப்பட்டது