அரசியல் அரிபரந்தாமன் ஆச்சாரியாருக் களித்த அபயம்! ஆச்சாரியார் ஒரு பக்கத்திலே தமது நியமனம், மேல் சபை அங்கத்தினராக நியமிக்கப் பட்டதைப் பற்றி வயது முதலிய காரணமற்ற காரணங்களைச் சொல்லிப் பார்த்துச் சரியென மக்களை நம்ப வைக்க முயலுகிறார். ஆச்சாரியாரை, அவர் சட்டசபைக் காங்கிரஸ் கட்சி யின் தலைவராகத் தேர்தெடுக்கப் படுவதற்கு, ஒருமணி ஒரே ஒரு மணி முன்னதாகத்தான், மேல் சபை அங்கத் தினராகக்கவர்னர் ஸ்ரீபிரகாசா அவர்கள் நியமித்தார்கள் என்பதை மறந்துவிடக் கூடாது. ஸ்ரீ பிரகாசா அவர்களை, டெல்லியை வீட்டு வரும் போது, மத்திய சர்க்கார் மந்திரி பதவியி லிருந்து விலகி வரும்போது, அன்பர் ஆச்சாரியார் அவர்கள், சென்னைக் கவர்னராக வருமாறு வேண்டுகோள் விடுத்து விட்டு வந்தார் என்ற செய்தியைப் பத்திரிக்கைகளிலே படித்த தையும் நினைவிற்குக் கொண்டு வாருங்கள். இதன் பின்னர், ஸ்ரீபிரகாசா அவர்கள், ஆச்சாரியார் தான் தன்னுடைய ஆசான், குருநாதர் என்று ஒரு கூட் டத்தில் கூறி யிருக்கிறார். 36
பக்கம்:புராணப்போதை.pdf/37
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை