பக்கம்:புராணப்போதை.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கருணாநிதி மேற் கூறிய செய்திகள், நிகழ்ச்சிகள் அத்தனையை யும் நினைவில் நிறுத்தி, நிறுத்துப் பார்த்திடும், உங்க ளுக்கு என்ன தோன்றுகிறது. சென்னையின் கவர்னராகப் ஸ்ரீ பிரகாசாவை வரும் படி, அன்பர் ஆச்சாரியார் டெல்லியிலே அழைத்து விட்டு வந்தார். அதன் பின்னர் அவர் கவர்னராகப் பதவி யேற்றார். கவர்னராக அவர் பதவியேற்ற போது, பொதுத் தேர்தல்கள் முடிந்து, சென்னை சட்ட சபையின் பல் வேறு கட்சிகளின் பலமும் நிலையும் தெளிவாகத் தெரிந்துவிட் டிருந்தன. கவர்னர், முறைப்படி, மெஜாரிட்டி யாகவுள்ள, சட்டசபைக் கட்சியை, கட்சியின் தலைவரை அழைத்து மந்திரி சபை அமைக்குமாறு கேட்க வேண்டும், ஜன நாயகமும் இதுதான். அப்போது காங்கிரஸின் பலம் 152 தான், சட்ட சபையில் மந்திரி சபை யமைக்கக் காங்கிரஸால் முடி யாது என்பது தெளிவாகி விட்டது, அதற்குப் பூரண மான, ஏன், குறைந்த அளவு மெஜாரிட்டியான அங்கத் தினர்கள் கூடக் கிடையாது, சட்ட சபையில், என்ப தால். இதுமட்டு மல்ல காங்கிரஸ் கட்சிக்கு பலமில்லை யென்பது மட்டுமல்ல, கட்சித் தலைவராக, சட்டசபைக் கட்சியின் தலைவராக எவரைத்தேர்ந்தெடுப்பது; எவரை தேர்ந்தெடுத்தால் ஆடிப் பலத்திற்கு உதவியாக 37

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புராணப்போதை.pdf/38&oldid=1706087" இலிருந்து மீள்விக்கப்பட்டது