கருணாநிதி முறையிட, அவர்தீர்மானம் வேண்டும் என்றும், மேலி டத்தாரின் அன்பும், ஆசியும், ஆதரவும் பெற்று வருக என்றும் கூறி, பின்னர் ஆச்சாரியார் அவர்கள் சட்டசபைக் காங்கிரஸ் கட்சியின் தலைவராகத் தேர்ந் தெடுக்கப்பட்டதும் அவரை அழைத்து, (அப்போதும் காங்கிரசின் பலம் 152 பேர்தான்) மந்திரி சபை அமைக்குமாறு கேட்டுக்கொண்டார். கவர்னர் ஸ்ரீபிர காசா அவர்கள். ஆச்சாரியார் சட்டசபைக் காங்கிரஸ் தலைவராகத் கட்சியின் தேர்ந்தெடுக்கப் படுவார். அதற்கான சம்மதம் மேலிடத்திலிருந்தும், ஆச்சாரியாரிடமிருந்தும் கிடைத்துவிட்டது என்ற செய்தி நாடெங்கும் பரவி யிருந்த நேரத்திலே, பத்திரிகைகளில் பத்தியாகச் செய்தி கள் பலப்பல நாட்களாகப் பிரசுரிக்கப்பட்டுவந்த அந்த சூழ்நிலையில், ஆச்சாரியார் மேல்சபையில் அங்கத்தின ராக, கவர்னரால் நியமனம் செய்யப்பட்டார், அதுவும் அவர் சட்டசபைக் காங்கிரஸ் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு ஒரு மணி, ஒரே ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக! உடனே சட்டசபைக் காங்கிரஸ் கட்சியின் தலைவ ராக ஆச்சாரியார், கவர்னரால் அழைத்து உபசரிக்கப் பட்டு மந்திரிசபை அமைத்திடும் பொறுப்பும் தரப்படு கிறார். இவை யாவற்றையும் கூர்ந்து கவனித்திடும் எல் லாம் எவ்வளவு முன்னேற்பாட்டுடன் திட்டமிட்டுச் செய்யப்பட்டவைகளாகத் தோன்றுகின்றன மக்க ளுக்கு? 39
பக்கம்:புராணப்போதை.pdf/40
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை