பக்கம்:புராணப்போதை.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புராணப்போதை வேறு கட்சிக்காரர்களை. அவர்கள் பூரண பலம் பெற்றிருந்தாலும் கவனியாது, காங்கிரஸ்காரர்களுக்குத் தான் ஆட்சிப்பீடம் என்று ஆச்சாரியார் வந்து, தனது தந்திர, உபாயங்களால் ஆட்களைத் தேடிப்பிடித்துக் காங்கிரசைப் பலப்படுத்திக்கொள்ளும் அளவு வரை யில், காலம் வரையில் கவர்னர் பேசாமலிருந்தார் என்று தானே கொள்ளவேண்டி யிருக்கிறது. கவர்னர் ஸ்ரீபிரகாசா, ஒரு காங்கிரஸ்காரர், கவர்ன ராக இருப்பதால் அவரது உள்ளம், உணர்வு அத்தனை யும் கட்சிப் பற்றற்று நடக்கவில்லை என்று எண்ண வேண்டிய நிலைக்கல்லவா மக்களை, அவரது செயல் கொண்டுபோய் விட்டது! ஏன் இந்த ஓரவஞ்சனை? ஜனநாயகம் எங்கே? இந்த நிகழ்ச்சி, அடிக்கடி ஆச்சாரியார் தந்திடும் வியாசர் விருந்தைத்தான், பாரதத்தைத்தான் எனக்கு நினைவூட்டுகிறது! ஆம், ஆத்திகர்களால் அடிக்கடி ஏத்தி யேத்தித் தொழுதிடும் பாரதம் பற்றிய நினைவைத்தான் எனக்குக் கொண்டு வருகிறது, இந்தச் சந்தர்ப்பத்தில்! - பாரதத்திலே, எப்போதும் பாண்டவர் பக்கத் துணையாகவே இருந்து வந்த கோபால கிருஷ்ணன் அரிபரந்தாமன் நினைவைத்தான் கொண்டு வருகிறார் பிரகாசா அவர்கள், தமது செய்கையின் மூலம். பாரதத்தை அரசியலில் அன்றாடப் பாடமாகக் கொண்டுள்ளனர்போலும் இந்தப் பாரதப் புத்திரர்கள். பாராள வந்ததும்? 40

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புராணப்போதை.pdf/41&oldid=1706090" இலிருந்து மீள்விக்கப்பட்டது