புராணப்போதை கவனியாது அலட்சியம் செய்து, பின்னர், அர்ஜுனனை நினைத்து, நினைத்த மாத்திரத்தில் வரும்படி செய்து, அவனைத் தான் முதலில் பார்த்தது போல நடித்து வாக்கு தந்து, முன் வந்து காத்திருந்த துரியோதனனை ஏய்த்த காட்சியைப் போலத்தானே. நிகழ்ச்சியைப் போலத்தானே இன்றைய சென்னை அரசியலை மதித்து நடத்தி யிருக்கின்றனர் ஸ்ரீபிரகாசாவும், ஆச்சாரியாரும். வேறென்ன? ஜனநாயக ஐக்கிய முன்னணியின் தலைவரான T.பிரகாசம். முன்கூட்டிக் கடிதம் எழுதியும் கவனி யாது இருந்து விட்டார் கவர்னர் அவர்கள். ஆனால், ஆச்சாரியாரை, அவர் கட்சித் தலைவராக ஒரு மணி நேரத்திற்கு முன்னால், மேல் சபை அங்கத் தினராக நியமித்து விட்டார்! அடுத்து அவரை, ஆச்சாரியாரை, உடனே அழைத்து அவரிடம் ஆட்சிப் பொறுப்பையும் ஒப் படைத்து விட்டார்! பாரதப் போருக்குமுன் நிகழ்ந்த மேற் குறிப்பிட்ட தூங்கும் பாவனைப் படலத்தை நினைவில் வைத்துத் தான் இந்த நவீன அரசியல் அரிபரந்தாமன் ஸ்ரீபிரகாசா அவர்கள் அன்பர் ஆச்சாரியாருக்கு அபயம் அளித்தார் போலும். பாரதம் போன்ற இதிகாச ஜாலமென்று நினைத்து இத்தகைய முறையற்ற செயல்களில் ஈடுபடுவது ஜன காயகக் கொலையன்றி வேறென்ன? 44
பக்கம்:புராணப்போதை.pdf/45
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை