மீண்டும் கிளைவ் ? ஜனநாயகம், ஜனநாயகம் என்று பேசிவந்த காங்கிரசார் இன்று நாடாண்டிடும் போக்கு ஜன நாயகத்தையே, ஜனநாயகம் என்பதன் பொருளையே புது முறையிலே, அதற்கு நேர்மாறான வழியிலே அமைத்துக் கொண்டனரோ என்று ஆயாசப்பட வேண்டி யிருக்கிறது. வடநாட்டினர், தென்னாட்டை, சென்னை இராஜ்ஜி யத்தை-திராவிட நாட்டைத் தங்களுக்கு மார்க்கட்டாக வைத்துக்கொள்வதில் மிகவும் அக்கரையோடு இருக் கின்றனர். இதற்கேற்ற சூழ்நிலை எங்கும், எப்பொழுதும் இருந்திட வேண்டும் என்பதிலே முழு கவனத்தையும் செலுத்திடத் தவறவில்லை, வடநாட்டினர் - வடநாட் டுத் தலைவர்கள். சென்னையில் கவர்னராக ஸ்ரீபிரகாசா அவர்கள் நியமிக்கப்பட்டு, அவர் சென்னைக்குப் புறப்படுமுன், டெல்லியில் அவருக்கு ஒரு பாராட்டு விழா நடை பெற்றது. அந்தப் பாராட்டு விழாவிலே ஸ்ரீபிரகாசா அவர் கள் பேசியுள்ள பேச்சு மிகவும் கவனிக்கப்பட வேண் டிய பேச்சாகும். 45
பக்கம்:புராணப்போதை.pdf/46
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை