புராணப்போதை அரசுரிமை நிலைத்திட விதையிட்டான், அடிகோலினான் என்பது சரித்திரம் கண்ட உண்மை, சகலருக்கும் தெரிந்த உண்மையுங்கூட! கிளைவ் முரடன், மூர்க்கன், விடாப்பிடிக்காரன், நினைத்ததைக் கண்மூடிக்கொண்டு செய்யவேண்டும், செய்து முடித்தே தீரவேண்டும் என்ற வெறி பிடித் தலைந்தவன். இப்படிப்பட்ட கிளைவின் மூர்க்கத்தனமும், விடாப் பிடி வெறித்தனமும் ஒரு வகையில், அந்த நேரத்திய சூழ்நிலையில், இங்கிலாந்தின் வெற்றிக்குப் பெரிதும் உதவியது, இந்தியாவில்! இதனால், சரித்திரத்தில் ஆங்கில ஏகாதிபத்தியத் தின் ஆங்கில ஆட்சியின் அஸ்திவாரத்தைக் கட்டியவன் என்று கிளைவ் அழைக்கப்படுவதுண்டு. அத்தகைய கிளைவாகத் தம்மை நினைத்துக்கொண்டு பேசிவிட்டு, இங்கே வந்திருப்பதால்தானோ என்னவோ. கவர்னர் ஸ்ரீபிரகாசா அவர்கள் முரட்டுத்தனமாக, தாம் நினைப்பதே நீதி - இட்டதே சட்டம் என்ற முறையிலே ஆட்சி செலுத்துகிறாரோ என்று மக்கள் நினைத்தால், அதிலொன்றும் ஆச்சரியமில்லை என்று கருதவேண்டி. யிருக்கிறது. கிளைவ் காலத்தில் ஏற்பட்ட ஆங்கில ஏகாதிபத்தி யம் ஒரு சில நூற்றாண்டுகளாவது நிலைத்து நடை பெற்றது இந்தியாவில். 48
பக்கம்:புராணப்போதை.pdf/49
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை