பக்கம்:புராணப்போதை.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கருணாநிதி கேள்விக்குறி! குழந்தை உள்ளத்திலே கிளம்பத் தவறக் காணோம். குறுநடை பழகிடும் சிறுவனிடமும் தோன்றிடத்தான் செய்கிறது. புரியாத, தெரியாத எதைக் கண்டாலும் குழந்தையுள்ளம் மட்டுமல்ல, குமரர், கிழவர், அறிஞர், ஆராய்ச்சியாளர் அனைவருமே அதைப்பற்றிய விவரங்களை, விளக்கங்களைத் தெரிந்து கொள்ள தம்மைத்தான் கேட்டுக்கொள்ளுகின்றனர். அது என்ன? அவை என்ன என்று. அது என்ன, அவை என்ன என்ற அளவிலே ஆரம் பித்த கேள்விக் குறி, அடிப்படைக் கேள்விக் குறி, அது ஏன் அப்படி இருக்கிறது? அவை ஏன் அப்படி இருக்கிறது? என்ற முறையில் கேள்விக் குறிகளை அடுக்கிக்கொண்டே போகின்றனர் அவரவர்கள் நிலை மைக்கு ஏற்றபடி, அறிவுக் கேற்றபடி, அனுபவத்துக்கு ஏற்றபடி. கேள்விக்குறிகள்! அவரவர் நினைப்பிற்குள்ளேயே கேட்கப்பட்டு, நினைவுச் சுழலிலே நீந்தி விளையாடி, நிம் மதியான, நிச்சயமான, நேர்மையுமான விடைகள். விளக்கந் தந்திடும் விடைகள், கிடைத்திடாது கலங்கிக் குழம்பிடும் நேரத்திலே, மக்கள் மன நிம்மதிக்காக. மன அமைதிக்காக, எண்ணத் தெளிவிற்காக எவரை யும் தேடியோடிப் பிடித்து நிறுத்தி, வேண்டித் தமது கேள்விக்குறிகளுக்கேற்ற தெரிந்த விடைகளை, விளக் கங்களைத் தேடித் திரிகின்றனர். சில நேரங்களில் விளக்கங்கட்கும் ஏற்ற புதுப்புது கேள்விக் குறிகளை யாவது கேட்டுத் தெரிந்துகொள்ளத் துடிக்கின்றனர்! 67

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புராணப்போதை.pdf/68&oldid=1706117" இலிருந்து மீள்விக்கப்பட்டது