புராணப்போதை மட்டுமல்ல, புரியாத நிலையுங்கூட இந்த நாட்டிலே இருந்திருக்கிறது! இதை யொளித்துப் பயனில்லை, பலனில்லை! படித்தவர்களிலுங்கூடப் பலருக்கு, இதெல்லாம், தெரிந்து கொள்ள வேண்டியவையல்ல, என்று ஒதுக் கப்படுகின் றன! வாழ்க்கையிலே இது போன்று. வாழ்க்கைப் பொருள்களைப் பற்றி மட்டுமல்ல, ஆண்டவன், அரசன், நண்பன், தாய், தந்தை, உற்றார், உறவினர், பொதுப் பணி, பூசல், கலகம், சண்டை, சமாதானம் எதைப் பற்றியுமே, 'ஏனோ தானோ' வென்று தாங்கள் மட்டு மல்ல, தமது வழி வழி வந்து வாழ்த்திப்போகும் தமது சந்ததிகட்குமே தேவையற்றவை, ஆராய்ந்திடக் கூடா தவை யென்று மனம்போன போக்கில், செக்கு மாட்டு வாழ்வு வாழ்கின்றனர். செக்குமாட்டு வாழ்வு, கண்மூடிக் கொண்டேனும், தாள நடை போட்டேனும், தன்னாலே சுற்றிச் சுற்றி வந்துகொண்டே யிருக்கும் செக்கு மாடுகளைப் போல, தான் உண்டு, தனக்கென்று ஏதோ கிடைத்த வேலை யுண்டு, கிடைத்திடும் கஞ்சியோ, சோறோ உண்டு இடையே ஏதோ ஒரு சிறிது தெரிந்த, அத்தையோ. பாட்டியோ. பாட்டனோ பாடிப் பாடிக் கேட்டுப் பழ கிப்போன பழைய பிள்ளையார் தோத்திரம், இரண் டொரு தேவார, திருவாசகம். இல்லையேல் திருப்புகழ். அருட்பா முதலிய சில பாடல்களைத் தன்னிஷ்டப்படி முனகித் தெய்வத்தைத் துதித்துப் போகிற கதிக்குப் 72
பக்கம்:புராணப்போதை.pdf/73
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை