புராணப்போதை பாணமும், அதனால் எரியுண்ட மன்மதனின் சோக முடிவும், அசுரர்களை அழித்த கதையும், இன்னும் எத்தனை எத்தனை நிகழ்ச்சிகள் காணக்கிடக்கின் றன. வேண்டுமென்றே நயவஞ்சகமாகத் தனது பொரு ளைப் பறித்துக்கொண்டு பொய்யனாக்க முயன்றதற்காக அர்த்தமற்று, அறமுமற்று கட்டுப்பட்டுக் கெட்டழிந்த அரிச்சந்திரனின் கதை யாருக்குத் தேவை, இன்னும் என்று ஏன் கேட்கக்கூடாது? அருணாசலபுராணம்! அரனின் அடியையும், முடி யையும் வராகமாகவும், அன்னமாகவும் வடிவெடுத் துக் கண்டுபிடித்து, யார் பெரியவர் என்ற வீண் விவா தத்தைத் தீர்த்துக் கொண்டனராம், காக்குங் கடவுளாம் மகாவிஷ்ணுவும், படைப்புக் கடவுளாம் பிரம்மாவும், அருணாசலம் எனப்படும் திருவண்ணாமலையில். படைத்தல், காத்தல் என்ற தொழிலைப் படைத்த கடவுள்களுக்கிடையே சண்டை, சச்சரவு இருவரில் யார் பெரியவர் என்பதுபற்றி! எவ்வளவு விந்தை! வேடிக்கை! இந்த விபரீத விளையாட்டுப் போட்டியின் வெற்றி - தோல்வியைக் கண்டறிய சிவனார் திருவண்ணாமலையிலே விசுவரூபமெடுத்து நின்றாராம்! இந்தப் போட்டியில் அன்ன வடிவெடுத்துப் பறந்து முடியைக் காணச்சென்ற பிரமன், இடையிலே சிவனின் திருச்சடையிலேயிருந்து கீழே விழுந்தவண்ண மிருந்த தாழம்பூவைச் சாட்சியாக வைத்துப் பொய்யாக. 84
பக்கம்:புராணப்போதை.pdf/85
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை