பக்கம்:புராணப்போதை.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புராணப்போதை நேரம் போவது தெரியாது சூதாடிக்கொண்டே இருப்பான், காலை, பகல், மாலை, இரவு என்ற கால மாறு தலைப்பற்றிய கவலைகள் ஏதுமின்றி. உணவு பற்றிய அக்கரையோ. உறக்கத்தைப் பற்றிய சிந்தனையோ சிறிது மில்லாத சோம்பேறி, சூதாடி, அவன். சூதாட வருவோர் போவோரை யெல்லாம் வலிய வலிய இழுத்து வம்புகள் செய்வான். வாதுகள் புரி வான். சூதாட்டந் தவிர வேறு வேலைகளில் பிறருடன் அவனுக்குத் தொடர்போ, பேச்சோ கிடையாது. ஊரார் அவனைக் கண்டு மிரண்டிடும் அளவுக்கு அவனது சூதாட்டப் பித்து, வளர்ந்து விட்டது. திடீரென ஒருநாள் அவன் ஊரார் ஒருங்கே கூடி யுள்ள கூட்டத்திலே, தன்னைப்பற்றிப் பேசி, அறிமுகம் செய்து கொண்டான். என்னவென்று அறிமுகம் செய்து கொண்டான்? "நான் ஒரு சூதாடி! பலே சூதாடி!" சோம்பேறி! என்ற முறையிலே அல்ல! பின் எப்படி? என்னவென்று. ஊர் மக்களே, உங்களுக்கு என்னைத் தெரியும், மிகமிக நன்றாக. என்னைப் பற்றி அறியாத ஒன்றையும் நான் உங்களுக்குச் சொல்லப் போவதில்லை, இப்போது. நான், மிகவும் யோக்கியமான முறையிலே, எனது வாழ்நாளைக் கழித்திருக்கிறேன். நாணயம் தவறாதவன். 8

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புராணப்போதை.pdf/9&oldid=1706058" இலிருந்து மீள்விக்கப்பட்டது