பக்கம்:புராணப்போதை.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கருணாநிதி பெண் பெரியவளான நேரத்திலே, முனிவரும் அவரது மனைவியும், உலக யாத்திரை புறப்பட்டனர். புறப்படுமுன், தமது மகளை யாரிடம் ஒப்படைத் துச் சென்றால் நலம்; நன்மை! கற்பு கெடாது, களங்க மற்று இருப்பாள், இருக்க முடியும், இருக்க விடுவர். என்று யோசித்தனர்! சிவன், விஷ்ணு, பிரம்மா, விநாயகர், முருகர், தேவேந்திரன், முப்பத்து முக்கோடி தேவர்கள். முத லிய எவருமே சரியில்லை, ஒவ்வொருவரும் தவறுகள், பெண் விஷயத்தில் செய்திருக்கின்றனர், நம்ப முடியா தவர்கள் நங்கையை விட்டுச் செல்ல, என்று, நினைத்துப் பார்த்து நீக்கி விட்டனராம். சிவன் உமையை உடலின் ஒரு பாதியாகவும், கங் கையைத் தலையிலும், அதே நேரத்தில் மோகினி வடி வத்தி லிருந்த விஷ்ணும் விட வில்லையே என்பது அவர் கள் நினைவிற்கு வந்திருக்கும்! விஷ்ணுவின் பல அவதாரங்களும், குறிப்பாக கிருஷ்ணாவதாரத்தில் நடத்திய கோலாகலங்களை மறக்க முடியாதிருந் திருக்கலாம் அவர்கள். இதைவிட, விஷ்ணு பிருந்தை என்ற முனிவரின் பத்தினியை அவளது கணவன் உருக்கொண்டு கற் பழித்தும், அவள் அதனால் மாண்டு போனதும், பிற கும் காமந்தணியாத விஷ்ணு, அவளது பிணம் எரிந்து குவிந்த சாம்பலிலே புரண்டு, கடைசியாக, சாம்பலிலே முளைத்த துளசிச் செடியாக மாலையாக அணிந்த பின் 93

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புராணப்போதை.pdf/94&oldid=1706143" இலிருந்து மீள்விக்கப்பட்டது