பக்கம்:புராணப்போதை.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புராணப்போதை னரே சுயநினைவிற்கு வந்தா ரென்று புராண நிகழ்ச்சி, அவர்களை எச்சரித்திருக்கும். இது போலவே, அகலிகையை, இந்திரன் கெடுத்த தும், தெய்வயானையுடன், வள்ளியைத் தேடிக்கொண்ட முருகனையும், தேவ தாசிகளுடன் கூடிக் குலவிடும் தேவாதி தேவர்களையும் நினைத்து ஒதுக்கி விட்டனர் போலும், மாண்டவ்யரும், அவரது தங்கையாகப் பிறந்து தாரமாகி விட்ட மங்கையும், தமது மகளின் பாதுகாப்புக்கு, இவர்கள் எவருமே ஏற்றவரல்ல, என்று. இறுதியாக இவர்கள், எமதருமனே, ஏற்றவன் என்று, எம தருமராஜனிடம், தமது மகளை ஒப் படைத்து, கற்பு கெடாது காப்பாற்றி, தாம் திரும்பி வரும்போது ஒப்படைக்க வேண்டுமென விட்டுச் சென்றனராம்,உலக யாத்திரை போகு முன். எமதருமனும், பாரதப்படி குந்தி தேவியைப் புணர்ந்து, பீமனைப் பெற்றவன் என்பதை எப்படித் தான் மறந்தார்களோ, இவர்கள். தங்கை அண்ணனையும், அண்ணன் தங்கையுைம் மணந்து கொண்டவர்கள் தானே, இவர்களும்! எம தருமனிடம், விடப்பட்ட, மங்கையை எமதரு மன், வெளியிலே யிருந்தால், எப்பிடியாவது, எவராது. பருவ மங்கையைப் பாழ்படுத்திக் கெடுத்து விடுவர். என்று பயந்து, அவளை வாயால் விழுங்கி, தனது வயிற்றி 94

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புராணப்போதை.pdf/95&oldid=1706144" இலிருந்து மீள்விக்கப்பட்டது