பக்கம்:புராணப்போதை.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புராணப்போதை இத்தருணம் பார்த்து அக்கினி அவளை நாடத் தொட, தொட்டதும் அவள் துவள, அக்கினி அணைக்க, அவள் மேலும் மேலும் இறுகி அணைத்து முத்த மழை பொழிந்திட காமக் களியாட்டம் தொடங்கி விட்ட தாம். தம்மை மறந்திருந்த இருவரும் எமதருமன் வரும் ஓசை கேட்டுத் திடுக்கிட்டனர். முனிவரது மகள் உடனே எமனைப் போல அக்கினி பகவானை வாயில் போட்டு விழுங்கி வயிற்றிலே பத்திரப்படுத்தி விட்டா ளாம். வழக்கம் போல எமதருமர், பருவக்குமரியை வயிற் றுக் கனுப்பி, வீடு சென்று இரவு வெளியிலே எடுத்து வழக்கமான லீலைகளை நடத்தி விடிந்ததும் வழக்கப்படி வயிற்றுக் கனுப்பி விட்டான். பகலில், எமன் வயிற்றி லிருந்த முனிவரின் மோகன மங்கையால் சும்மா கிடக்க முடியவில்லை! தனது வயிற்றி லிருந்த அக்கினியை வெளியீ லெடுத்து, எமனின் வயிறையே காமக்கள மாக்கிக் கலவியின்ப மனுபவித்தாளாம், அக்கினியுடன். பகலில் அக்னியுடன், சுகபோகம், இரவே எமதரு மனும், கூடிக் குலவுதல் இப்படியே அவள் இன்ப உல கில் நடந்தாள். அக்னி, அழகு மங்கையின் அடி வயிற்றிலே அடை பட்டுக் கிடந்ததால் மூவுலகிலும் அக்னியின்றி அனைவ ரும், தீராத தொல்லைகளுக்கு ஆளாயினராம். 96

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புராணப்போதை.pdf/97&oldid=1706146" இலிருந்து மீள்விக்கப்பட்டது