பக்கம்:புராணப்போதை.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புராணப்போதை இத்தனையும் ஆண்டவன் லீலைகள் என்று பக்தி யோடு படிக்கப் படுகிறது. பாரதத்திலே வரும் பாஞ்சாலி, பத்தினிப் பெண் கள் வரிசையிலே சேர்க்கப் படுகிறாள். தகுமா? முறையா? பொருத்தமா? யோசியுங்கள்! ஐவருக்குந்தேவி, அழியாத பத்தினி, ஐந்து பேருக் குத் தேவியானவள், ஐந்து புருடருக்கு மனைவியான வள் எப்படி பத்தினியாவாள்? ஐவர் மட்டுமா? ஆறாவதாக, கர்னன் மீதும் நெஞ்சைப் பறி கொடுத்திருந்தாளாமே, அந்த அழி யாத பத்தினி, பாஞ்சாலி! பாரதத்திலே வரும் மாம்பழச் சருக்கத்திலே, மரத்தி லிருந்து கீழே வீழ்த்தப்பட்ட மாம்பழத்தை மீண்டும் மரத்திலே ஒட்ட வைக்கக் கண்ணன் காட்டிய வழிப்படி, பாண்டவரும் துரோபதையும் தமது மன தின் ரகசியத்தைக் கூறும்போது வெளி யிட்டாளே. பாஞ்சாலி, கர்ணன் மீது எனக்குக் காதல் மயக்கம் உண்டு என்று எப்படி ஏற்பது, கற்புக்கரசி என்று பாஞ்சாலியை? முடியாதே! புராணங்கள் - புண்ணிய கதைகள்- பக்திக்கும் முக்திக்கும் வழி காட்டிடும் தூய ஏடுகள் என்று கூறப் படுபவைகளி லிருந்து ஒரு சிலவற்றை- மாண்டவ்யர் கதையையும் பெண்களின் கற்புக்கு எடுத்துக் காட் டெனக் கூறப்படும் பாரதப் பாஞ்சாலி பற்றியும் கூறி யதே இவ்வளவு வெட்கக் கேடாகக் காணப்படுகிறத 98

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புராணப்போதை.pdf/99&oldid=1706148" இலிருந்து மீள்விக்கப்பட்டது