பக்கம்:புராண மதங்கள்.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



அண்ணாதுரை டது! கவிவாணர்களுக்கு முதல் தரமான கேடு செய்ப வர்கள், கவிதா மண்டலத்துள் உறைபவர் , கவிதாமணி களைக் காக்கக் கடமைப்பட்டவர், என்று கனத்த குரல் எழுப்பி, நண்பரென நடிப்பவர்தாம்.) குளத்து நீர் குடிக்க உதவும் என்பது பொது உண்மை . ஆனால் எல்லாக் குளமுமா? இல்லை. சில குளிக்க மட்டுமே உதவும்! சில மாடு குளிப்பாட்ட மட்டுமே உதவும்! அதுமட்டுமில்?ஷய! குடிக்கும் நீர் உடைய குளமே கூட வெப்பம் அதிகமாகி, வறண்டு கிடக்கும்போது, சேறு மேலிட்ட நிலையில் இருக்குமானால், குடிக்கப் பயன்படாது. குளம் தானே, குடி தண்ணீர்தான் இது, என்று கூறுபவர் யார்? அதுபோலப் புராணங்கள் சேறு நிரம்பிப்போன குட்டைகளாகவும், (மட்ட அறி வுக்கு மட்டுமே பயன்படக் கூடிய விதத்திலே) மாடு புரளும் மடுவாகவும், பலப்பல விதத்திலே உள்ளன, ஊற்று நீர் காண உலகு துடிக்கிறது, இங்கோ , இவர் கள் குழம்பிய குட்டை, தூர்ந்து போன திருக்குளம், துவர்ப்பு நீர்ப்பள்ளம், இவைகளிலே புகுந்து நீராடு கிறார்கள், போதாக்குறைக்கு, வாலிபர்களையும் அழைக் கிறார்கள். "வாரீர் நீராட" என்று. வருவாரா? நல்ல முறையில் நடத்தப்படும் நகராட்சியிலே, தீரமான ஆணையாளர் இருந்தால், அவர், நாற்றமடிக்கும் குட் டைகளைத் தூர்த்துவிடச் சொல்வார், இல்லையேல், அங்கே எவரேனும் குளித்தோ, அந்நீரைக் குடித்தோ, நோய் கண்டு இறந்து படுவரே, அதன் பயனாய் ஊரி லேயே கூட நோய் பரவக் கூடுமே, என்று எண்ணி, அதுபோலவே, தன்னாட்சியிருந்து, அது தகுதியானவர் களிடமும் இருக்குமானால், அறிவுத் தாகத்தைத் தீர்க்க முடியாத இந்த ஆபாசபள்ளங்களை மூடிவிட்டு, புதிய ஊற்றுகளைக் கண்டு பிடிப்பர். நீர் நிலையங்களையும் அமைப்பர், இன்று குடலைப் புரட்டும் நாற்ற மடிக்கும் குளத்துக்குக் காவல் புரிவதைப் பெரியதோர் சேவை யென்று கருதுபவர்கள், அந்த நீர் நிலையங்களிலே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புராண_மதங்கள்.pdf/12&oldid=1033251" இலிருந்து மீள்விக்கப்பட்டது