பக்கம்:புராண மதங்கள்.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



புராண - மதங்கள் வேலை பெறலாம், இன்பம் உறலாம். ஏன், அவர்கள் இதற்குத் தங்களைத் தயார் செய்துகொள்ளக்கூடாது. இன்றளவுவரை, இடிந்த கோட்டைகள், சரிந்த மதில் கள், தூர்ந்துபோன அகழிகள் ஆகியவற்றைக் காட்டி, ஆங்காங்கே சிலர்' இது துரோபதை மஞ்சள் அரைச்ச இடம், இது பீமராஜாவின் பாதம் பட்டதால் ஏற் பட்ட பள்ளம். "இது ஏகலைவன் கட்டைவிரலி லிருந்து ஒழுகிய இரத்தத்தின் கறை" என்று காட்டிப் பணம் கேட்டுப் பிழைக்கும், "வழிகாட்டுவோர் போலிருக்க வேண்டும்? எவ்வளவு அறிவு இந்தச் சத் தற்ற காரியத்திலே பாழாக்கப்படுகிறது, என்பதை எண்ணி வருந்தி; இவர்களைக் கண்டிக்கிறோமே தவிர வேறு என்ன! புராணங்களிலே,எதற்காகச் சீர்திருத்தக்கருத்தைப் புகுத்தப் போகிறார்கள். பசுவும் புலியும் ஒரே துறையில் நீர் குடித்தது, பரமசிவன் ரிஷபவாகனா ரூடராக வந்து சேர்ந்தார், வெட்டப்பட்ட தலை மீண்டும் ஒட்டிக் கொண்டது, என்ற அற்புதங்களைப் புராணங்களிலே புகுத்தி, இவை யாவும் ஈசனை நேசித்ததன் பலன் என்று முடித்து, இத்தகைய மேலான பலனை, ஆண்ட வன் அருளைப் பெறவேண்டுமானால், நீங்களும் "பக்தி செய்து கொண்டிருங்கள் என்ற உபதேசம் செய்ய இந்தப் புராணங்கள் எழுதப்பட்டன. இதிலே, சீர்திருத் தம் நுழைய என்ன அவசியம் இருக்க முடியும்? சீர்திருத் தம் என்றால் என்ன? இருப்பதைச் சீராகும்படி திருத் துவது . கெட்டுக்கிடக்கிறது, ஆனால் திருத்தக்கூடிய அளவிலே இருக்கிறது, திருத்தாவிட்டால் கேடுபோய், சீராகிவிடும் என்பதுதானே அதன் பொருள். அடியார் கள், எதைக் கெட்டுக் கிடக்கிறது என்றார்கள்? சமூகத் திலே ஜாதிபேதம் தலைவிரித்து ஆடுகிறது, அதை ஒளித்தாக வேண்டும், எல்லா மக்களையும் ஒன்றுபடுத் திடவேண்டும், ஏழை பணக்காரன் என்ற பேதத்தைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புராண_மதங்கள்.pdf/13&oldid=1033252" இலிருந்து மீள்விக்கப்பட்டது