பக்கம்:புராண மதங்கள்.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



புராண - மதங்கள் கின்றன. மற்ற தேசங்களிலுள்ள அதே தொழில்கள் மிகச் சிறந்து அற்புத முறைகளில் அபிவிருத்தி அடைந் திருக்கின்றன. பிற நாடுகளில் ரசாயனக்காரர்களும், சிற்பிகளும், வர்த்தகத் துறை விற்பனர்களும் தொழில் களை மேற்கொண்டு நடத்தி வருகிறார்கள், அவர்கள் நவீன விஞ்ஞான சாதனங்களாலும் அதி நூதன கலா முறைகளாலும் தொழில்களை வியக்கத்தக்க முறையில் அபிவிருத்தி செய்து வருகிறார்கள். இந்தியாவின் கைத்தொழில் தாழ்ச்சிக்குக் கூட்டுக் குடும்ப வாழ்க்கையும் ஒரு காரணமாக இருந்திருக் கிறது. விவாகத்திற்குப் பிறகும் அநேகர் தங்கள் பெற் றோர்களுடனும் கூட்டாக ஒரே குடும்பத்தில் இருந்து குடும்பப் பொதுச் செலவில் வாழ்க்கை நடத்துகிறார் கள். அதனால் ஏதோ நன்மை உண்டு என்றாலும், தற் கால சமுதாய நிலைமைகளில் அதன் தீமை அதிகப்பட லாயிற்று. அதனால் கைத்தொழில் அபிவிருத்திக்குச் சேதம் உண்டாகிறது. கூட்டுக் குடும்பங்களில் சம்பாத் தியம் செய்கிறவர்களுக்கு பொருள் சேர்க்க வேண்டு மென்ற ஆசை மிகக் குறைந்து போகிறது. அவர்களைச் சார்ந்து காலம் தள்ளும் மற்றவர்களிடம் சோம்பலும் பிறர் சொல்வதைக் கேட்டு நடக்கும் சுதந்திரமற்ற தன் மையும் வளர்ந்து வருகின்றன. அவர்கள் எதையும் வழி காட்டியாக முன்னின்று நடத்த விரும்புவதில்லை. மத ஸ்தாபனங்களில் நடைபெற்று வரும் தர்ம கைங்கரிய முறைகளால் ஜனங்களில் அநேகரிடம் சோம்பல் வளருவதற்கு இடமேற்பட்டு விடுகிறது. அத்தகைய தர்ம ஸ்தாபனங்களும் சிறந்த நோக்கமும் பரோபகாரக் கொள்கையும் பெரிதும் பாராட்டத் தக்க வைதான். ஜன சமூகமும் சர்க்காரும் அத்தகைய தர்ம நிர்வாகங்களை ஏற்றுக்கொள்ளும் வரையில் அவைக ளால் நல்ல பலனேற்படும் என்பதில் தடையில்லை. ஆனால் தற்கால தர்ம ஸ்தாபனங்கள் தப்பு வழிகளில் உபயோகிக்கப் படுகின்றன. மதத்தின் பெயரைச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புராண_மதங்கள்.pdf/17&oldid=1033256" இலிருந்து மீள்விக்கப்பட்டது