பக்கம்:புராண மதங்கள்.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



அண்ணாதுரை சொல்லித் திடகாத்திரமுள்ளவர்கள் இலாபமடைகிறார் கள். ஜனங்களின் மூட நம்பிக்கையாலும் ஏமாந்த தன்மையாலும் சோம்பலுள்ளவர்களே நன்மை யடை கிறார்கள். உண்மையில் தேவைப்பட்ட அநேகர் கவ னிப்பாரற் றிருக்கிறார்கள். தற்காலத்தில் தொழிலின் திறமை மக்களின் மனோசக்தியைப் பொறுத் திருக்கிறது. தொழிலபி விருத்தி மக்களின் தேர்ச்சி தந்திரம், நூதன யுக்தி ஆகியவைகளுக்கு ஏற்றவாறு சிறப்படைகிறது. பண் டைக் காலத்தில் இந்தியா தொழில் துறையில் மிகப் பெரிய பெயர் பெற்றிருந்தது. அக்காலத்தில் அக்ஷர கணிதம், க்ஷேத்திர கணிதம், வான சாஸ்திரம், அனு பவ விஞ்ஞானம் முதலியவைகளின் உதவியால் இந்திய தேசத்தில் கைத்தொழில் நல்ல நிலைமையில் இருந்து வந்தது. ஆனால் தேசத்திற்குப் பற்பல துன்பங்கள் நேரிட்டு வந்தன. பகைவர் படையெடுப்புகள், எதிரி களின் வெற்றி, அந்நியர் ஆட்சி முதலியவைகளால் இந்தியர் அறிவின் பலத்தையும் ஒழுக்கத்தின் உயர்வை யும் இழக்க நேர்ந்தது. கைத்தொழில்களில் தங்களு டைய முழுத் திறமையையும் காட்டி அனுகூல மடை வதற்கான நல்ல நிலைமை இந்தியர்களுக்கு வெகு கால மாக இல்லையென்றே சொல்லலாம். இந்தியர்களின் தொழில் நிலை உயர்ந்த வேறெந்தத் தேசத்தோடும் வைத்து ஒத்துப் பார்க்க லாயக்கற்றதாக இருக்கிறது. இந்தியாவின் தேவைக்கும் மூன்றில் ஒரு பாகம் குறைவாகவே ஆகாரப் பொருள் விளைகிறது. ஆதலால் இந்தியர்களுக்குப் போதுமான உணவு கிடைப்பதில்லை என்று விளங்குகிறது. ஆனால் ஒரு சராசரி அமெரிக்க னுக்கு வருஷம் ஒன்றுக்கு 2664- பவுண்டு நிறையுள்ள ஆகாரம் கிடைக்கிறது. தவிரவும் இந்தியர் உணவில் போஷணாசத்து மிகவும் குறைவு. இப்படிப்பட்ட வறுமை காரணங்களாலும் இந்தியக் கைத்தொழில் முன்னேற முடிய வில்?ல.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புராண_மதங்கள்.pdf/18&oldid=1033257" இலிருந்து மீள்விக்கப்பட்டது