பக்கம்:புராண மதங்கள்.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



47 அண்ணாதுரை பத்திரிகை, உன் தமிழல்ல!! காங்கிரசுக்கு முன்பு பிறந் ததே ஒரு கனபாடி ஏடு, சுதேசமித்திரன் அது சாமான் யமானதா, 4 பக்கம் பத்திரிகை என்றால், அதிலே விளம்பரம் எவ்வளவு தெரியுமா? அப்படிப்பட்டப் பத்திரிகை ஒருவரின் கனவை வெளியிட்டது, சாதா ரண மானதல்ல! நான் கைலாயத்தை கண்டு, பரமனும் பார்வதியும் பேசியதைக் கேட்டேன் என்றால் நீ சிரிக்கி றாயே! சுதேசமித்திரன் ஆசிரியருக்கு, இதே போலச் செய்தி அனுப்பப் பட்டது , அவர் சிரிக்க வில்லை பரதா! உன் போல, இதை யெல்லாமா பத்திரிகையிலே வெளி யிடுவது என்று பத்திரிகா தர்மமும் பேசவில்?ல. அழ காக, அலங்காரமாகப் பிரசுரித்திருந்தார். என்ன கனவு தெரியுமோ? மகா கனம் சீனுவாச சாஸ்திரியாருக்குக் கனவிலே மஹா விஷ்ணு காட்சி யளித்தாராம், முத லிலே கொஞ்சம் ஒளி தெரிந்ததாம், பிறகு வரவர ஒளி பெரிதாகிக் கொண்டே இருந்ததாம், கடைசியில் சைவ மகாகனத்துக்கு மஹா விஷ்ணு தரிசனம் தந்தாராம். இதைப் பத்திரிகையிலே வெளியிட, மித்ரன் ஆசிரியர், உலகப் பொருளாதார மென்ன, யுத்தத்தின் போக் கென்ன, நாணயமாற்று விகித விளக்க மென்ன நாட்டுப் பொது நிதி விஷய மென்ன, சர்ச்சிலின் தவறு. ஸ்டாலினின் கவனக் குறைவு, சீனாவின் சிரத்தை. அமெரிக்கரின் அக்கரை, என்ற இன்னோரன்ன பிற மகத்தான விஷயங்களிலே மனதை இலயிக்கச்செய்யும் ஆசிரியர், மகாவிஷ்னு மகாகனம் கனவிலே பிரத்யட்ச மானார் என்ற செய்தியை வெளியிட்டதே. இன்னம் சில கூறட்டுமா" என்று மேலும் பேசத் தயாரானான் வீரன். வேண்டாம்! வேண்டாம் வீரா! உன் கனவு பற் றியே இக்கிழமை வெளியிடப் போகிறேன் என்று வீரனிடம் கூறினேன், வெளியிட்டு விட்டேன். என் வேலை முடிந்தது, இனி சிந்திப்பது உங்கள் வேலை!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புராண_மதங்கள்.pdf/48&oldid=1033287" இலிருந்து மீள்விக்கப்பட்டது