பக்கம்:புராண மதங்கள்.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



புராண - மதங்கள் சேராமல் புதுமைக்கு உழைப்போர்பால் சேர்ந்து புதுமை பரவி, புன்மை நீங்கி, நாடு ஓங்க, நலம் ஓங்க, தமிழ் தழைக்க உதவும்படி செய்தல் வேண்டும். தமிழ் கெட இந்தி நுழைந்தபோது தமிழ் நாட்டில் கொந்த ளிப்பும் போரும் நேரிட்ட காலையில் தமிழ்த் தம்பிரான கள் ஆரிய ஆட்சிக்கு எதிராக மூச்சு விட்டால் மூக்கறு படும் எனப்பறந்து மூலையில் கிடந்தனர் தமிழர் இதனை மறந்தாரில்லை. கொதித்தனர். அது முற்றா முன்னம் முனைந்து நின்று மடாதிபதிகள் முத்தமிழ் வளர்த்துத் தமிழ்நாட்டைத் தமிழருக்காக்கும் பணியில் ஈடுபட வேண்டும். இதைச் செய்யின் "எங்கள் மடாதிபதி என்று மக்கள் அன்புடன் கூறி இன்புறுவர், இல்லை யேல "சைவத்தை நித்த நித்தம் முயன்று புவியில் நீளப் பரப்பியது போதும், இனி மடம் மக்களுக்கு ஆகட்டும்" எனக் கூற, மக்கள் முன் வருவர். காலம் துணை செய் யும். சட்டம் "சரி" என்னும்!! பண்டைக்கால மன்னர்களும், பொன் படைத்த பிற சிலரும், அன்றிருந்த மடாதிபதிகளிடமோ அல்லது தேவையை உத்தேசித்து அதற்கென உண் டாக்கப்பட்ட மடாதிபதிகளிடமோ தங்களுடைய சொத்துக்களில் ஒரு பகுதியை எடுத்து அவர்களிடம் ஒப்படைத்தனர் இவ்வாறு ஒப்படைத்ததற்குக் கார ணம், சமய வளர்ச்சி, மொழி வளர்ச்சி நடைபெறு வதற்கு என்று சொல்லப்படுகிறது. ஆனால் இந்த மடாதி பதிகளால் சமயமும், மொழியும், வளர்ச்சியடைந்திருக் கிறதா என்றால், இல்லை என்ற முடிவுக்கே வரவேண்டி யிருக்கிறது. இந்த முடிவை நாம் கூறினால் நம்மை நாத்திகப் பட்டியில் சேர்த்து, "இவர்கள் இப்படிக் கூறா மல், வேறு எப்படித்தான் கூறுவார்கள் என்று மிக எளிதாக நம்மீது குற்றம் சாட்ட, ஆத்திகர்கள் என்று தம்மை விளம்பரப் படுத்திக்கொண்டுள்ள சிலர் தயா ராய் இருப்பர் என்பதை நாம் அறிவோம். ஆனால் மடாதிபதிகள் மீது இந்தக் குற்றச் சாட்டைச் சுமத்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புராண_மதங்கள்.pdf/61&oldid=1033300" இலிருந்து மீள்விக்கப்பட்டது