பக்கம்:புராண மதங்கள்.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



புராண - மதங்கள் வெற்றிபெற முடியுமா என்பதை வேண்டுமானால் பரீட்சித்துப் பர்க்கட்டும், இதற்கு நாம் மட்டுமல்ல, நாட்டு நலனில் நல்லெண்ணம் கொண்டுள்ள வேறு பலர்கூடத் தயாராக முன்வருவர், இன்று நாடு அந்த அளவுக்கு விழிப்படைந்துவிட்டது. 'தினசரி' கூறுவதுபோல், "மண்ணையும், பொன் னையும், பெண்ணையும் மனத்திலும் மதியாத துறவி என்பதற் கறிகுறியாகச் சாமியார் என்ற பட்டஞ் சூட் டிக்கொண் டிருக்கும் ஒருவர் மண்ணும் பொன்னும் மடாதிபதிகளின் ஆதிக்கத்தில் தான் இருக்கவேண்டும் என்பதற்காக உயிரை விடப் போவதாகச் சொல்லு கிறார் என்றால், அவருடைய எண்ண த்தில் என் னென்ன சிந்தனைகள் தோன்றி அலமோதி அலைக் கழித்திருக்கும் - எத்தனை பண்டார சந்நிதிகள் அவர் மனக்கண் முன் தோன்றி, எங்களை உய்விக்க வந்த இத்தமரே! உம்முடைய உண்ணா நோன்பினால் எங்கள் கண்ணான கனி ரச வாழ்க்கை காப்பாற்றப் படட்டும்! அதற்கென எங்களிடம் உருக்கும் சொத்துக்கள் எங்களிடமே இருக்கும்படி சர்க்கார் மனம் மாறட்டும்! சாகும் வரை - சர்க்கார் இந்த மசோதாவைக் கை விடும் வரை உம்முடைய உண்ணா நோன்பை விடப் போவதில்லை என்பதில் விடாப் பிடியாய் இரும்! உண்ணாமுலையம்மை பாகன் உம்மைக் கைவிட மாட் டார் ! உம்முடைய உறக்க நேரத்தில், எம்முடைய புராணாதிகளில் கூறியுள்ள பிரகாரமாகத்தானே மாறு வேடத்தில் வந்து 'ஞானப்பால்' ஊட்டி உம்முடைய உயிரைக் காப்பாற்றுவார்! இதனை யார் மறைந்து நின்று பார்த்து வெளியே கூறினாலும், அதனை மறைக்க நம்முடைய பக்தர்கள் தயாராக உள்ளனர் !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புராண_மதங்கள்.pdf/65&oldid=1033304" இலிருந்து மீள்விக்கப்பட்டது