பக்கம்:புராண மதங்கள்.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



அண்ணாதுரை இவ்வளவும், இங்கு, தாது வருஷப் பஞ்சம் - வங் காளப் பஞ்சம் - பீகார் பூகம்பம் - கங்கைப் பெருக்கம் காவிரி உடைப்பு - காலராக் கொடுமை - உணவுத் திண்டாட்டம் - போன்ற பற்பல, பதைபதைக்கும் சம் பவங்களின் போதும், பரமனின் பெயரால், சிறையில் வைக்கப்பட் டிருந்தன. பக்தர்கள், இந்தப் பணத்துக்கு வட்டி பெறுகிற இடம் பரலோகம் என்று நம்பி , இந்த பகவான் பாங்கியில், பெரும் பொருளை டிபாசிட்டாகக் கட்டி வந்தனர், தலைமுறை தலைமுறையாக. இவ்வளவு பெரும் பொருள் முடங்கிக் கிடப்ப தால், எவ்வளவு பெரிய பொருள் நஷ்டம், தொழில் வளக் குறைவு, ஏற்படுகிறது என்பது பற்றிய எண் ணமே ஏற்பட வில்லை. மேலும் மேலும், தத்தமது சக்தி யானுசாரம், கைங்கரியம் செய்த வண்ணம் இருந்தனர் அவ் வப்போது அம்மனின் தாலியும் ஐயனின் பூணூ லும், குதிரையின் வாலும், யானையின் தந்தமும், மயி லின் தோகையும், மரகத வளையலும், காணாமற் போய் விடும் - போனால் என்ன - பக்தர்கள் பதைப்பர் - புலன் விசாரிப்பர் - முடிவு தெரியுமுன்னம், முந்திக்கொண்டு வருவார் ஒரு புதிய பக்தர், காணாமற் போனதைப் புதி தாகச் செய்து தர! அவர், கள்ளக் கையொப்பத்தின் மூலம் கனதனவானானவராக இருக்கக் கூடும் ! இருந் தால் என்ன! காணிக்கையாக அவர் தரும் பொருளால், அந்தக் கதையை கூறவா முடியும்!! இப்படிப் பெரும் பொருள் பல தலைமுறைகளாக - சரியான கணக்கும் குறிப்புமற்று - இருந்து வருகி றது. இந்த நீண்ட காலத்தில் - தஞ்சாவூர் அரண்மனை கலனாகி இருக்கிறது, செஞ்சி கோட்டை பாழாகி இருக்கிறது, ஊமையன் கோட்டை மண் மேடாகி இருக்கிறது - எவ்வளவோ மாறுதல்கள் ஏற்பட் டிருக்கின்றன -- இந்த மாறுதல்களும் குழப்பங்கள், கொந்தளிப்புகள், அரசு மாற்றங்கள் சிறு சிறு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புராண_மதங்கள்.pdf/68&oldid=1033307" இலிருந்து மீள்விக்கப்பட்டது