பக்கம்:புராண மதங்கள்.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



புராண - மதங்கள் அவைகளின் மூலம், சீர்திருத்த கருத்துக்களைப் பெறலாம் என்று எண்ணுவது பயனற்ற நினைப்பு. முதலில், இதனை மெய்யன்பர்கள் தைரியமாக ஒப் புக்கொள்ள வேண்டும். அதை ஒப்புக்கொள்ளாமல், "இது வெறும் புராணமல்ல! இதிலே உள்ள புதை பொருள் அமோகம். இதிலே சரிதம், பூகோளம், விஞ் ஞானம், தத்துவம், கணிதம், சீர்திருத்தம் போன்ற இன்ன பிற உண்டு" என்று பேசுவது, ஆராய்ச்சி மனப் பான்மைக்கு அத்தாட்சி என்று சிலர் எண்ணுகிறார் கள்; உண்மை அது அல்ல. பல இருப்பதாகச் சொன் னால் 'சிலராவது' தேறாதா என்ற சபலம், நீண்ட பட்டி யைத் தந்தால், யாருக்கு எதெதில் பிரியமோ, அதற்காக வென்று, புராணத்தை நாடுவர் என்ற ஆசை இல்லை என்றால், திட்டமாகத் தெளிவாக வரையறுத்துக் கொண்டு பேசுவர். மதபோதனையை, எளிதாக்கவும், பாமரர் மனமும் பரவச மடையவும், சிக்கலான தத்து வங்கள் பயன்படாது என்று கண்டவர்கள், எந்த மதத் துறையிலே தங்களுக்கு அக்கரை இருந்ததோ, அதனைப் பரவச் செய்வதற்குக் கண்டுபிடித்த சாமர்த்தியமான வழி புராணம், அவர்களின் எண்ண ம், அந்தக் காலத் தின் கூறு. எனவே அத்தகைய புராண போதகர்கள், பழிக்கப்பட வேண்டியவர்க ளல்ல; அவர்கள் அந்தக் காலத்தில், தங்களுக்கு யுக்தமானது என்று எதை நம்பிச் செய்தார்களோ, அதனை, விடாப்பிடியாக இன்று கட்டி அலைகிறவர்களும் மக்களின் இன்றைய அறிவுத் தாகத்தைத் தீர்க்க, அந்தப் புராணமே போதும் என்று நம்புகிறவர்களும், உலகில் தோன்றியுள்ள எந்தப் புதுக்கருத்தும், புராணத்திலே உண்டு என்று மயக்க மொழி பேசுவோரும் ஆகிய திருக்கூட்டம் இருக் கிறதே, அதுவே, இன்று கண்டனத்துக்கு ஆளாகி றது. "இதோ அஞ்சு கண்ணன் வருகிறான், சாப்பிட்டு விடு" என்று மிரட்டி, அன்பையும் அன்னத்தையும் கலந்து குழந்தைக்கு ஊட்டும் தாயிடமல்ல கோபம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புராண_மதங்கள்.pdf/9&oldid=1033248" இலிருந்து மீள்விக்கப்பட்டது