பக்கம்:புராண மதங்கள்.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



புராண - மதங்கள் தேவன், என்பது மூட நம் பிக்கை - முலாம் பூசப்பட்ட மூடநம்பிக்கை, உலகம் ஏற்குமா, இந்த மூட நம்பிக் கையைப் புகுத்திய சூதுமதியினர், சொர்ணை உள்ள வர்களானால், விஞ்ஞானச் சூரியனை விரட்ட வேண் டாமா, ஏட்டிலிருந்து, அறிஞர் எண்ணத்திலிருந்து! தத் தமது வீட்டுச் சிறுவர்களின் மனதிலிருந்தே கூட ஓட்ட முடியாதே, விஞ்ஞானச் சூரியனை! ஆகாய வெளியில் காணப்படும் அண்டங்களுக்குள், சூரியனும் ஒரு கோளம். இதை அக்னி மேகங்கள் சூழ்ந் திருக்கின்றன. இதனை நடுவாகக்கொண்டு எட்டுக் கிர கங்கள் சுற்றி வருகின்றன. அவைகள் புதன், சுக்கிரன், பூமி, செவ்வாய், வியாழன், சனி. யுரானஸ், நெப்சயூன், என்பவை. இதன் சுற்றளவு சுமார் 26 இலட்சம் மைலுக்கு அதிகம். குறுக்களவு 8 இலட்சத்து 70 ஆயிரம் மைலுக்கு அதிகம். இதன் பரப்பு, பூமியைக் காட்டிலும் 121 இலட்சம் மடங்கு பெரிது. இதன் கனம் பூமியைக் காட்டிலும் 13 இலட்சம் மடங்கு அதிகம். இது பூமிக்குச் சுமார் 9 கோடியே 28 இலட்சத்து, 30 ஆயிரம் மைலுக்கு அப்பால் இருக் கிறது. இதில் பல புள்ளிகள் உள்ளன. அவை 1000 மைல் ஆழமுள்ளதாய் உள்ளன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புராண_மதங்கள்.pdf/95&oldid=1033334" இலிருந்து மீள்விக்கப்பட்டது