பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரா.சீ.

113



81. சோழன் போரவைக் கோப்பெருநற்கிள்ளி

போர்ப் பேர் ஆரவாரம் கடலினும் பெரிதாக உள்ளது. அவன் களிறு கார் காலத்து இடியைவிட முழக்கம் செய்கிறது.

ஆத்தி மாலை சூடியவன்; கவித்த கையை உடையவன்; இச்சோழ மன்னன் தோல்வியை அளிக்கிறான். இவன் கை அகப்பட்டவர் யாரோ? இரங்கத் தக்கவர் ஆகின்றனர்.

ஆர்ப்பு எழு கடலினும் பெரிது; அவன் களிறே கார்ப் பெயல் உருமின் முழங்கல் ஆனாவே, யார்கொல் அளியர்தாமே-ஆர் நார்ச் செறியத் தொடுத்த கண்ணிக் கவி கை மள்ளன் கைப்பட்டோரே?

திணை - வாகை துறை - அரச வாகை,

அவனை அவர் பாடியது.

82. சோழன் போரவைக் கோப்பெரு நற்கிள்ளி

ஊரில் புதிதாக வந்த மள்ளனோடு ஆத்தி மாலை சூடிய நெடுந்தகை நிகழ்த்தும் மற்போர் வியக்கத்தக்கதாக உள்ளது.

விறுவிறுப்பும் விரைவும் கொண்டதாக உள்ளது. அதற்கு எதை உவமையாகக் கூறுவது? இவ்வூர்க் கட்டில் பின்னுபவன் அவன் கை தான் நினைவுக்கு வருகிறது. ஊரிலே திருவிழா; மனைவிக்குப் பிள்ளைப்பேறு; மழை வேறு; இந்த இழுபறிகளுக்கு அவன் ஈடு கொடுத்து ஆக வேண்டும்.

விழாவுக்குச் செல்வதா மனைவிக்குச் சென்று உதவுவதா மழை பெய்வதால் நிலத்துக்குச் சென்று விதைக்கச் செல்வதா இம் மூன்றையும் அவன் கவனித்துத்தான் ஆக வேண்டும்.

அவன் தொழில் கட்டில் பின்னுவது; அதையும் செய்து முடிக்க வேண்டும். வாரைச் செலுத்தும் அவன் கை ஊசி அது விறுவிறுப்புடன் இயங்குகிறது. அவ் இழிதொழிலன் கை ஊசியின் விரைவு அவன் செய்யும் போரில் காண முடிகிறது. அதைத்தான் உவமையாகக் கூற முடியும்.