பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124

புறநானூறு செய்யுளும் செய்திகளும்



நீ நின் படை வீரர்களுக்குச் சோறும் இறைச்சியும் தந்து ஊக்குவித்துப் படை எடுக்கிறாய். அவர்களோடு யானைகள் பலவும் சேர்ந்து ஊர்களை அழிக்கும் என்று பகைவர்கள்

அஞ்சுகின்றனர். இது இரண்டாவது பகை. அவர்கள் தம் ஊர்களில் தங்குவதற்கு அஞ்சித் தம் ஊரைவிட்டு நீங்கத் துணிகின்றனர்.

ஒன்று மகளிர் உன்பால் கொள்ளும் காதல்பகை; அது உன் இளமை பற்றியது. மற்றொன்று மோதல்பகை. அது உன் வீரத்தின் விளைவு.

அலர் பூந் தும்பை அம் பகட்டு மார்பின், திரண்டு நீடு தடக்கை, என்னை இளையோற்கு இரண்டு எழுந்தனவால், பகையே ஒன்றே, பூப் போல் உண்கண் பசந்து, தோள் நுணுகி, நோக்கிய மகளிர்ப் பிணித்தன்று ஒன்றே, ‘விழவின்றுஆயினும், படு பதம் பிழையாது, மை ஊன் மொசித்த ஒக்கலொடு, துறை நீர்க் கைமான் கொள்ளுமோ? என, உறையுள் முனியும், அவன் செல்லும் ஊரே.

திணை - அது துறை - இயன்மொழி. அவன் மகன் பொகுட்டெழினியை அவர் பாடியது.

97. அதியமான் நெடுமான் அஞ்சி

உறையிலிருந்து கழித்த வாள்கள் பகைவர்கள் தம் மதிலை அழித்தலின் ஊனில் முழுகி உரு இழந்து விட்டன.

வேல்கள் குறும்புமிக்க அரண்களையும், பகைவர்தம் நாடுகளையும் வென்றமையின் அவை சிதைந்து கிடக்கின்றன.

களிறுகள் கதவுகளைத் தாக்கி அவர்தம் குறும்புகளைச் சிதைத்தலினால் அவற்றின் கொம்புகளில் உள்ள கிம்புரிகள் கழன்று விட்டன.

குதிரைகள் பகைவர்களை உழக்கியதால் குளம்புகள் குருதிக் கறை பெற்றுள்ளன.

கடல் போன்ற சேனையை உடைய அரசன் தாங்கும் கேடயங்கள் துளைபட்டுக் கிடக்கின்றன.