பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128

புறநானூறு செய்யுளும் செய்திகளும்

சென்று, அமர் கடந்து, நின் ஆற்றல் தோற்றிய அன்றும், பாடுநர்க்கு அரியை, இன்றும் பரணன் பாடினன் மற்கொல் - மற்று நீ முரண் மிகு கோவலூர் நூறி, நின் அரண் அடு திகிரி ஏந்திய தோளே!

திணையும் துறையும் அவை, அவன் கோவலூர் எறிந்தானை அவர் பாடியது.

100. அதியமான் நெடுமான் அஞ்சி

அவன் கையது வேல்; காலில் கழல் புனைந்துள்ளான்;

மெய்யது வியர்வை; மிடற்றின்கண் பசும்புண். பனந்தோட்டை யும், வெட்சி மலரையும் வேங்கைப் பூவுடன் விரவித் தன் சுரிந்த முடியில் சூட்டியவனாய் வரிப்புலியோடு பொருத வலிமைமிக்க களிறு போல் பகைவருடன் போர் செய்துள்ளான். அதனால் எழுந்த சினம் இன்னும் மாறவில்லை. அவனுடன் பகை கொண்டு போருக்கு வருபவர் உய்வது இயலாது.

செருக் களத்துப் பகைவரை நோக்கிய அவன் கண்கள் தன்

சிறுவனை நோக்கியும் அந்தச் சிவப்பு மாறவில்லை. அடங்காச் சினத்தினனாக உள்ளான்.

ஆம்.

கையது வேலே காலன புனை கழல்; மெய்யது வியரே, மிடற்றது பசும் புண், வட்கர் போகிய வளர் இளம் போந்தை உச்சிக் கொண்ட ஊசி வெண் தோட்டு, வெட்சி மா மலர், வேங்கையொடு விரைஇச் சுரி இரும் பித்தை பொலியச் சூடி, வரிவயம் பொருத வயக் களிறு போல, இன்னும் மாறாது சினனே, அன்னோ! உய்ந்தனர் அல்லர் இவன் உடற்றியோரே, செறுவர் நோக்கிய கண், தன் சிறுவனை நோக்கியும், சிவப்பு ஆனாவே.

திணையும் துறையும் அவை திணை - வஞ்சியும், துறை கொற்றவள்ளையும்

அதியமான் தவமகன் பிறந்தவனைக் கண்டானை அவர் பாடியது.