பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரா.சீ.

149



அரவு எறி உருமின் முரசு எழுந்து இயம்ப, அண்ணல் யானையோடு வேந்து களத்து ஒழிய, அருஞ் சமம் ததையத் தாக்கி, நன்றும் நண்ணாத் தெவ்வர்த் தாங்கும் பெண்ணை அம் படப்பை நாடு கிழவோயே!

திணை - பாடாண் திணை, துறை - பரிசில் துறை.

மலையமான் திருமுடிக் காரியை மாறோக்கத்து நப்பசலையார் பாடியது.

127. வேள் ஆய் அண்டிரன்

யாழ்கொண்டு இசைமீட்டி யானைகளைப் பரிசிலாகப் பெற்றுச் சென்றவர் பலர். கட்டுத் தறிகளில் யானைகள் கட்டி இருந்த இடத்தில் இன்று யானைகள் இல்லை. காட்டு மயில்கள் தாம் அங்கு வட்டமிட்டுக் குழுமி இருக்கின்றன. -

ஆய்வீடு இன்று அதுவும் வெறிச்சிடுகிறது; தாலி தவிர ஏனைய ஆபரணங்கள் அனைத்தையும் இரவலர்க்குத் தந்துவிட்டு மகளிர் பொலி விழந்து நிற்கின்றனர்.

மற்றைய அரசர் பலர் தம் வீடுகளில் சுவைமிக்க அடிசில் தாமே உண்பர்; பிறர்க்கு ஈதல் இன்றி வாழ்வர். செல்வம் மிக்கு உள்ளது. புகழ் அதைப் பற்றி அவர்கள் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. இப்படி வாழ்பவர் பலர் உள்ளனர். அதுபோல் ஆய் வாழாமல் மற்றவர்க்கு ஈந்து உயர்புகழ் பெற்று உள்ளான்.

‘களங்கனி அன்ன கருங் கோட்டுச் சீறியாழ்ப் பாடு இன் பனுவற் பாணர் உய்த்தென, களிறு இலவாகிய புல் அரை நெடு வெளில், கான மஞ்ஞை கணனொடு சேப்ப, ஈகை அரிய இழை அணி மகளிரொடு சாயின்று என்ப ஆஅய் கோயில்; சுவைக்கு இனிது ஆகிய குய்யுடை அடிசில் பிறர்க்கு ஈவு இன்றித் தம் வயிறு அருத்தி, உரைசால் ஓங்கு புகழ் ஒரீஇய முறைசு கெழு செல்வர் நகர் போலாதே.

திணை - அது துறை கடைநிலை ஆயை உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் பாடியது.