பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/171

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரா.சீ.

171



‘எந் நாடோ? எனப், நாடும் சொல்லான்; ‘யாரோ? எனப், பேரும் சொல்லான்; பிறர் பிறர் கூற வழிக் கேட்டிசினே - ‘இரும்பு புனைந்து இயற்றாப் பெரும் பெயர்த் தோட்டி அம் மலை காக்கும் அணி நெடுங் குன்றின், பளிங்கு வகுத்தன்ன தீம் நீர், நளி மலை நாடன் நள்ளி அவன் எனவே,

திணை - அது துறை - இயன்மொழி. அவனை அவர் பாடியது.

151. இளவிச்சிக்கோ

இன்று நேற்று அல்ல. காலம் காலமாக மலைநாட்டுத் தலைவன் கண்டீரக்கோ அவனை நச்சிப் பாடுநர் விரும்பிச் செல்வர்.

அவன் தன் வீட்டை விட்டு வெளியே நாடு கடந்து சேண் தூரம் சென்றாலும் நாங்கள் பரிசு பெறாது திரும்புவது இல்லை.

அவர் வீட்டுப் பெண்டிர் இளம் பெண் யானைகளைப் பரிசிலாகத் தந்து அனுப்புவர். எப்பொழுதும் யாம் பரிசில் பெறாமல் திரும்பிச் சென்றது இல்லை. அத்தகைய பெருமை உடையவன். அவ்னை இன்று நேரில் காண்கிறோம். கண்டு மகிழ்வு கொள்கிறோம். அவனைத் தழுவி யாம் எம் பாராட்டுதலைத் தெரிவிக்கிறோம். அவனை நேசிக்கிறோம்.

இளவிச்சிக்கோவே நீயும் அவனுடன் அமர்ந்திருக்கிறாய். உன்னைத் தழுவிக் கொள்ளத்தான் எங்களுக்கு விருப்பம். அழகிய தேருக்கு உரியவன் நன்னன் அவன் வழி வந்தவன் நீயும் தழுவிக்கொள்வதற்குத் தக்கவன்; என்றாலும் பாடுநர்க்கு உன் வாயில் எப்பொழுதும் அடைத்திருக்கிறது. அதனால் எம் சுற்றத்தினர் உன் மலையைப் பாடுவதையும் தவிர்த்துவிட்டனர்.

பண்டும் பண்டும் பாடுநர் உவப்ப, விண் தோய் சிமைய விறல் வரைக் கவாஅன். கிழவன் சேட் புலம் படரின், இழை அணிந்து, புன் தலை மடப் பிடி பரிசிலாகப்,