பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரா.சீ.

19



யாண்டு உளன் ஆயினும் அறியேன், ஒரும் புலிசேர்ந்து போகிய கல் அளை போல ஈன்ற வயிறோ இதுவே: தோன்றுவன் மாதோ, போர்க்களத் தானே!’ - 1-6/86

மற்றொரு தாய் தன் மகன் போருக்கு அஞ்சி ஓடி விட்டான் என்று யாரோ சொல்லக் கேட்டு வீரம் கொண்டு களம் நோக்கிச் செல்கிறாள். பால் ஈந்த தன் முலையை அறுத்து எறிவேன் என்று வீர மொழி பேசிச் செல்கிறாள். சிதைந்து வேறு ஆகிய அவன் உடலைக் கண்டு அவள் உவகை கொள்கிறாள். ஈன்ற ஞான்றினும் அவள் பெரிது உவந்தனள் என்கிறார் கவிஞர்.

மற்றொரு வீர மகள் முதல் நாட் போரில் தன் கணவனை இழந்தாள். அடுத்த நாள் தன் உடன் பிறந்தவனை இழந்தாள். மூன்றாவது நாள் தன் ஒரே மகன் சிறுவன் அவனுக்குச் சீருடை தந்து போர் உடைவாள் தந்து செருக்களம் நோக்கிச் செல்க என அனுப்புகிறாள்.

இதைப் போன்ற வீரம் மிக்க மக்களைப் பெறுவதில் அவர்கள் வீறு கொண்டு வாழ்ந்தனர் என்று கூறப்படுகிறது. மகளிர் மறம் அவர்கள் வாழ்க்கை அறமாகக் கொள்ளப்பட்டது என்பது அறிவிக்கப்படுகிறது. ஈன்று புறந்தருதல் தாயின் கடமை; களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடன் என்று தெரிவித்தனர்.

வீரச் சிறப்பு

வேழத்தை வீழ்த்திப், புலியை மடிவித்து, மானைக் கொன்று, பன்றியைச் சாய்த்துப், பின் புற்றில் இருந்த உடும்பில் சென்று அம்பு பதிந்தது என்று கூறப்படுகின்றது. அரசனின் வில் அம்பு அதன் ஆற்றலைச் சொல் அம்பில் தருகிறார். சொற்கள் அடுக்கி அம்புபோல் வெளிப்படுகின்றன. அழகான சொல் லோட்டம் அமைந்துள்ளது.

“வேழம் வீழ்த்த விழுத் தொடைப் பகழி

பேழ்வாய் உழுவையைப் பெரும் பிறிது உறீஇப் புழல்தலைப் புகர்க்கலை உருட்டி, உரல்தலைக் கேழல் பன்றி வீழ, அயலது ஆழற் புற்றத்து உடும்பில் செற்றும் வல்வில் வேட்டம் வலம்படுத் திருந்தோன்’ 1–6/152