பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/195

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரா.சீ.

195



ஏற்கெனவே தந்து விட்டேன் என்று சொல்லி அவன் மறுப்பது இல்லை. மீண்டும் தொடர்ந்து தினமும் சென்றாலும் தருவதில் பொய்ப்பது இல்லை.

யாம் வேண்டியவாறு எம் வெறும் கலத்தை நிரப்புவான். அவனும் தன்னை உதவிக்கு அழைக்கும் அரசர்களுக்குப் போர்த் தொழிலை முடித்துத் தரட்டும்; அவனுக்கு வெற்றிகள் உண்டாகுக!

கூட்டமாகப் பெரும் பொருள் வந்து குவிவதாக; பசுக்களைத் தொழுவத்தோடு கேட்டாலும், களத்தில் விளையும் நெல்லின் குவியல் முழுவதையும் கேட்டாலும், பொன் ஆபரணங்களோடு களிற்றையும் கேட்டாலும் எமக்குத் தருவான். மற்றவர்களுக்கும் அவ்வாறே தரும் இயல்பினன்.

அத்தகைய சிறப்புகள் உடையவன் ஆதலின் எம் தலைவனின் உள்ளங்காலில் முள்ளும் தைக்காதிருக்க ஈவோர் அருகிவிட்ட இவ்வுலகில் அவன் பிறர் வாழத் தருகிறான்; அவர்களை வாழ வைக்கிறான். அவன் தாள் வாழ்வதாக.

இன்று செலினும் தருமே; சிறு வரை நின்று செலினும் தருமே; பின்னும், ‘முன்னே தந்தனென் என்னாது, துன்னி வைகலும் செலினும், பொய்யலன் ஆகி, யாம் வேண்டியாங்கு எம் வறுங்கலம் நிறைப்போன் தான் வேண்டியாங்குத் தன் இறை உவப்ப அருந் தொழில் முடியரோ, திருந்து வேற் கொற்றன்; இன மலி கதச் சேக் களனொடு வேண்டினும், களம் மலி நெல்லின் குப்பை வேண்டினும், அருங் கலம் களிற்றொடு வேண்டினும், பெருந்தகை பிறர்க்கும் அன்ன அறத் தகையன்னே. அன்னன் ஆகலின், எந்தை உள் அடி முள்ளும் நோவ உறாற்கதில்ல! ஈவோர் அரிய இவ் உலகத்து, வாழ்வோர் வாழ, அவன் தாள் வாழியவே!

திணை - பாடாண் திணை, துறை - இயன்மொழி.

அவனைக் காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக் கண்ணனார் பாடியது.