பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/200

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200

புறநானூறு செய்யுளும் செய்திகளும்



எந்தை! வாழி, ஆதனுங்க! என் நெஞ்சம் திறப்போர் நிற் காண்குவரே, நின் யான் மறப்பின், மறக்கும் காலை, என் உயிர் யாக்கையின் பிரியும் பொழுதும், என் யான் மறப்பின், மறக்குவென்-வென் வேல் விண் பொரு நெடுங் குடைக் கொடித் தேர் மோரியர் திண் கதிர்த் திகிரி திரிதரக் குறைத்த உலக இடைகழி அறை வாய் நிலைஇய மலர் வாய் மண்டிலத்து அன்ன, நாளும் பலர் புரவு எதிர்ந்த அறத் துறை நின்னே.

திணை - பாடாண் திணை, துறை - இயன்மொழி.

ஆதனுங்களைக் கள்ளில் ஆத்திரையனார் பாடியது.

176. ஓய்மான் நல்லியக் கோடன்

கேழல் பன்றி குத்திக் கிளறி வெளிப்படுத்தும் சேற்றில் ஆமையின் முட்டையையும், ஆம்பல் கிழங்கையும் விளையாடச் செல்லும் இளம் பெண்கள் கண்டு எடுப்பர். நீர் வளம் மிக்கது மாவிலங்கை என்னும் ஊர். அதன் தலைவன் நல்லியக் கோடனை யான் மதிக்கும் தலைவனாகப் பெற்றுள்ளேன். அவன் நட்பு எனக்கு வாய்த்துள்ளது. இது யான் செய்த நல்வினைதான். விதி எனக்கு உதவியுள்ளது.

அவன் அருள் நிரம்பிய மென்மை அது காணும்தோறும் இப்படித்தான் நினைக்கத் தோன்றுகிறது. அவனைக் கண்ணாரக் கண்டு அறியாத நாட்கள் வீணாகக் கழிந்தவை என்பதை உணர்கிறேன்.

பாரியின்பறம்பில் பணிச்சுனையில் உள்ள தெளிந்த நீரை அதே ஊரில் உள்ளவர்கள்கூட ஒரு சிலர் அதனைப் பயன்படுத்தாமல் அதனை ஒதுக்கி விடுகின்றனர். அதே போன்ற மடமைதான் எனது; நான் இதுவரை அவனை அறியாதது, அவனோடு உறவு கொள்ளாதது வீண் வீணாகிவிட்டன. நாட்கள்; வெறுமை உற்ற நாட்கள்அவை.