பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/222

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

222

புறநானூறு செய்யுளும் செய்திகளும்


அதுபோல் பரிசில் பெற விழைபவரும் தொடர்ந்து வந்து கொண்டே இருப்பர்.

அவரை வரவேற்றுக் கொடை நல்குவோர்தம் உடைமைகள் அனைத்தும் இவ் இரவலர்தம் உடைமைகள் ஆகும். அவ்வாறே அவர் செல்வம் இன்மை இவரையும் இன்மையர் ஆக்கிவிடும். செல்வமும் வறுமையும் இரவலர்களைப் பாதிப்பன ஆகும்.

கடவுள் ஆலத்துத் தடவுச் சினைப் பல் பழம் நெருநல் உண்டனம் என்னாது, பின்னும் செலவு ஆனாவே, கலிகொள் புள்ளினம்; அனையர் வாழியோ இரவலர்; அவரைப் புரவு எதிர்கொள்ளும் பெருஞ் செய் ஆடவர் உடைமை ஆகும், அவர் உடைமை; அவர் இன்மை ஆகும் அவர் இன்மையே.

திணையும் துறையும்

பெரும்பதுமனார் பாட்டு.

200. விச்சிக்கோ

பனி படரும் மலை உச்சியில் உள்ள பலா மரத்தின் கனியைக் கவர்ந்து உண்ட கருவிரலையுடைய ஆண் குரங்கு தன் பெண் குரங்குக்கு அதனைத் தந்து அதனை அழைத்துக் கொண்டு அம்மலையின் உச்சியில் மூங்கில் மீது உறங்குகின்ற மலை நாட்டை உடையவன் நீ களம் பல சென்று வெற்றி கொண்ட வேந்தன் நீ விச்சிக் கோவே!

பூத்துப் பொலிவுடன் விளங்கும் முல்லைக் கொடி நாத்தழும்பு ஏறப் பாடாது எனினும் அது கொழு கொம்பு இன்றித் தவிக்கிறது என்று கருதித் தான் ஏறிச் சென்ற தேரினைக் கொள்க என்று கொடுத்த வள்ளல் பாரி அவன் செல்வ மகளிர் இவர்.

யானே பரிசில் பெற்று வாழும் புலவன்; மற்றும் அந்தணன் யான். நீயோ வாட் போரில் வல்ல அரச மரபினன். நினக்கு யான் தர அவர்களை நீ மணந்து ஏற்றுக் கொள்க.

பகைவரைக் களத்தில் வெற்றி காணும் வேந்தன் நீ; இவர்களை ஏற்றுக் கொள்வாயாக.