பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/250

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

250

புறநானூறு செய்யுளும் செய்திகளும்


அவன் புகழ் உடம்பு அது விண்ணையும் கடந்தது. திசை

எட்டும் பரவியது. அதனை அடக்கி வைக்க நீ எவ்வாறு தாழியைச் செய்ய இயலும்?

இந்தப் பெரிய நிலம் சக்கரமாகவும், இதன் கண் உள்ள பெரிய மலைகள் மண்ணாகவும் கொண்டுதான் உன்னால் தாழி அமைக்க முடியும். அது உன்னால் இயலாது.

கலம் செய் கோவே கலம் செய் கோவே! இருள் திணிந்தன்ன குரூஉத் திரள் பரூஉப் புகை அகல் இரு விசும்பின் ஊன்றும் சூளை, நனந் தலை மூதூர்க் கலம் செய் கோவே! அளியை நீயே யாங்கு ஆகுவைகொல்? நிலவரை சூட்டிய நீள் நெடுந் தானைப் புலவர் புகழ்ந்த பொய்யா நல் இசை, விரி கதிர் ஞாயிறு விசும்பு இவர்ந்தன்ன சேண் விளங்கு சிறப்பின், செம்பியர் மருகன்கொடி நுடங்கு யானை நெடுமாவளவன்தேவர் உலகம் எய்தினன் ஆதலின், அன்னோற் கவிக்கும் கண் அகன் தாழி வனைதல் வேட்டனைஆயின், எனையது உம் இரு நிலம் திகிரியாப், பெரு மலை மண்ணா வனைதல் ஒல்லுமோ, நினக்கே?

திணை - அது துறை - ஆனந்தப்பையுள்.

அவனை ஐயூர் முடவனார் பாடியது.

229. சேரமான் யானைக்கட் சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை

நட்சத்திரங்களுக்கு இடையே வானத்துமீன் ஒன்று மாநிலத் தில் விழ அது கண்டு அன்றே யாம் அஞ்சினோம். கேடு ஒன்று வரும் என்று எங்கள் ஏடுகள் உரைத்தன.

ஏழாம் நாள் அதன்படியே நடந்துவிட்டது. படை வன்மையும் கொடை வன்மையும் உடைய வேந்தன்; அவன் எங்களிடமிருந்து விடை பெற்றுக் கொண்டான்.