பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/289

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரா.சீ.

289



கோட்டங் கண்ணியும், கொடுந்திரை ஆடையும், வேட்டது சொல்லி வேந்தனைத் தொடுத்தலும், ஒத்தன்று மாதோ, இவற்கே செற்றிய திணி நிலை அலறக் கூழை போழ்ந்து, தன் வடி மாண் எஃகம் கடிமுகத்து ஏந்தி, ‘ஓம்புமின், ஓம்புமின், இவண் என ஓம்பாது,

தொடர் கொள் யானையின் குடர் கால் தட்பக், கன்று அமர் கறவை மான, முன் சமத்து எதிர்ந்த தன் தோழற்கு வருமே.

திணையும் துறையும் அவை, ஒரூஉத்தனார் பாடியது.

276. மதுரைப் பூதன் இள நாகனார்

வயது முதிர்ந்த தாய் நரை மூதாட்டி; இலவ மரத்தின் விதை போன்ற கண்ணை உடைய வற்றிய முலயினள் அவள் தன் காதல் மகன் படைக்குள் புகுந்து அவனே முதன்மை வகிக்கிறான்.

ஆய மகள் குடப் பாலில் தெறிக்கும் புரை மோர்த்துளிபோல் அப் படையை அவன் ஒரு கலக்குக் கலக்குவிக்கின்றான். எதிரியின் படை சிதறி ஓடுவதற்கு இவனே காரணம் ஆகின்றான்.

நறு விரை துறந்த நரை வெண் கூந்தல், இரங் காழ் அன்ன திரங்கு கண் வறு முலைச், செம் முது பெண்டின் காதல்அம் சிறாஅன். மடப் பால் ஆய்மகள் வள் உகிர்த் தெறித்த குடப் பால் சில் உறை போலப், படைக்கு நோய் எல்லாம் தான் ஆயினனே.

திணையும் துறையும் அவை

மதுரைப் பூதன் இளநாகனார் பாடியது

277. பூங்கண் உத்திரையார்

மீன் உண்ணும் கொக்கின் தூவி போன்ற நரைத்த கூந்தலை உடைய முதியவளின் மகன் களிறு எறிந்து தானும் பட்டனன் என்ற

19