பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/301

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரா.சீ.

301



உறைப்புழி ஒலை போல, மறைக்குவன் - பெரும நிற் குறித்து வரு வேலே.

திணை - கரந்தை துறை - குடிநிலை உரைத்தல்

ஒளவையார் பாடியது.

291 நெடுங்கழுத்துப் பரணர்

துடி அடிக்கும் சிறுவர்களே பறை அடிக்கும் பாணர்களே! முதலில் அவனை மொய்த்துக் கொண்டிருக்கும் பறவைகளை ஒட்டி விலக்குவீராக! அதற்கு உங்கள் துடியும் பறையும் பயன் படட்டும். யான் விளரிப் பண்ணில் பாடி அவ்வோசையால்

குறுநரியை விரட்டுவேன்.

அரசன் தன் மார்பில் அணிந்திருந்த மணி மாலையை இவனுக்கு அளித்து அவன் அணிந்திருந்த மாலை ஒன்றனைத் தான் அணிந்து கொண்டான். இவன் விழுப்புண்பட்ட நிலை அறிந்தால் அரசன் என்னைப்போல் பேரதிர்ச்சி அடைவான். அவனுக்காக

இரங்கித் தவிப்பான்; அவனால் இத்துயரைக் தாங்க இயலாது.

சிறாஅஅர்! துடியர் பாடு வல் மகாஅஅர்! து வெள் அறுவை மாயோற் குறுகி, இரும் புள் பூசல் ஒம்புமின் யானும், விளரிக் கொட்பின், வெள் நரி கடிகுவென்; என் போல் பெரு விதுப்புறுக, வேந்தேகொன்னும் சாதல் வெய்யோற்குத் தன் தலை மணி மருள் மாலை சூட்டி, அவன் தலை ஒரு காழ் மாலை தான் மலைந்தனனே!

திணை - அது; துறை - வேத்தியல். நெடுங்கழுத்துப் பரணர் பாடியது.

292, விரிச்சியூர் நன்னாகனார்

வேந்தன் வாழ்க’ என்று கூறி மதுவைத் தன் கலத்தில்

பலர்க்கும் தந்து வார்க்க இவன் மட்டும் தனக்கு முதலில் தரும்படி கேட்பது முறைகேடு என்று கூறுவீர் ஆயின் நீங்கள் கூறுவது