பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/317

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரா.சீ.

317



314. ஐயூர் முடவனார்

மனைக்கு விளக்கம் தருபவளாகிய மனைவிக்குக் கணவன்; போரில் முந்தி நின்று தன் படை வீரர்களைக் காக்கும் வீரன்; அவன் நடுகற்கள் மிக்கு உள்ள பாழிடங்களையும், நெல்லி மரங்களையும் உடைய வன்புலச் சீறுாரில் வாழும் குடிமகனும் ஆவான.

தன் அரசனுக்கு ஏதாவது துன்பம் நிகழ்வதாயின் தம் சேனை நிலை கெட்ட நிலையில் தாக்க வந்த பகைவரைத் தடுத்து நிறுத்தும் கற்சிறையாவான்.

மனைக்கு விளக்கு ஆகிய வாணுதல் கணவன், முனைக்கு வரம்பு ஆகிய வெல் வேல் நெடுந் தகை, நடுகல் பிறங்கிய உவல் இடு பறந்தலைப், புன் காழ் நெல்லி வன் புலச் சீறுர்க் குடியும் மன்னும் தானே கொடி எடுத்து நிறை அழிந்து எழுதரு தானைக்குச் சிறையும் தானே- தன் இறை விழும்.உறினே.

திணையும் துறையும் அவை. ஐயூர் முடவனார் பாடியது.

315. அதியமான் நெடுமான் அஞ்சி

உள்ளதைப் பலருக்கும் பகிர்ந்து அளித்து உண்பான்; வேறு சிலருக்குத் தரக் கடமைப்பட்டிருந்தாலும் முதலில் தன்னை அணுகி இரப்பவருக்கே தந்து உதவுவான். பழகுதற்கு இனியன். எளியவருடன் பழகுவதில் இனிமை காண்பவன். இது இவன் கொடைப் பண்பு.

வீட்டில் சொருகி வைக்கும் தீக் கடை கோலைப் போல் அடங்கிக் கிடப்பான். மற்று அது எரியும் காலத்து வெளிப்படும் நெருப்புப் போலத் தான் வெளிப்படுங்காலத்துப் பகைவர்க்கு அழிவாக அமைவான். இது இவன் வீரச் செயல்.

உடையன் ஆயின் உண்ணவும் வல்லன்; கடவர் மீதும் இரப்போர்க்கு ஈயும்;