பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/347

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரா.சீ.

347



349. மகட்பாற் காஞ்சி

வேல்முனை கொண்டு நெற்றி வியர்வையைத் துடைக்கும் வேந்தனும் கடுமையான சொற்களையே பேசுகிறான். அவளை அடைவது உறுதி என்று உரைக்கின்றான்.

அவளைப் பெற்றவனும் நெடுமொழி பேசி அலைக் கழிக்கின்றான். பணிமொழி பேசி இணங்குதல் செய்யான்.

முளை இள நெருப்பு அது தோற்றுவிக்கும் மரத்தையே அழிக்கிறது. அதுபோல் வளர் நலம் உடைய இவள் பிறந்ததால் இந்த ஊருக்கு இவள் அழிவு ஆயினள். இவளால் இந்த ஊரே அழியக் காத்திருக்கிறது.

நுதி வேல் கொண்டு நுதல் வியர் துடையாக், கடிய கூறும், வேந்தே தந்தையும் நெடிய அல்லது, பணிந்து மொழியலனே; இஃது இவர் படிவம்; ஆயின், வை எயிற்று, அரி மதர் மழைக் கண், அம் மா அரிவை, மரம் படு சிறு தீப் போல அணங்கு ஆயினள், தான் பிறந்த ஊர்க்கே

திணையும் துறையும் அவை. மதுரை மருதன் இளநாகனார் பாடியது.

350. மகட்பாற் காஞ்சி

ஏற்கனவே இந்த ஊரின் அகழி தூர்ந்து கிடக்கிறது; மதில் உறுப்புகள் சிதைந்து சீர் அழிந்து உள்ளன. போர்கள் பல கண்டது இம் மூதூர்.

இனி இந்த ஊரைச் சுற்றிச் சுற்றி வருகின்றனர் முரசினை உடைய பெரு நிலவேந்தர்; இவர்கள் போர் செய்யாமல் இருக்கப் போவது இல்லை.

இவள் தமையன்மாரும் கண் சிவந்து மண் சிவக்கப் போருக்கு நிற்கின்றனர்.