பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/356

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

356

புறநானூறு செய்யுளும் செய்திகளும்


அவர்களை உலகம் மதிக்கிறது. ஒரு சிலரே இவ்வாறு உலகம் போற்றும் உயர்நிலை அடைகின்றனர்.

பலர் வாழும் வகை அறியாதவர்களாக உள்ளனர். அவர்கள் போற்றிக் காக்கும் செல்வமும் நிலைத்து இருப்பது இல்லை; அவை அழிந்து விடுகின்றன.

இதனை நன்கு அறிந்து நாளும் நல்லொழுக்கத்தில் நிலை பெறுக, நற்புகழ் எய்துக. இல்லை என்பார்க்கு ஈதல் செய்க. நச்சி வருபவர்க்கு நயந்து தருக, மெச்சி உன்னைப் புகழ மேலோன் ஆகுக.

வாழ்க்கையின் முடிவு சுடுகாடு; அங்குப் புலையன் படைக்க அவ் எளிய உணவை உண்கின்றனர். அழல்வாய் அடுக்கப்படு கிறான். இதுதான் முடிவு; இதை அறிந்த பின்பு நெறி அறிந்து வாழ்பவர் ஒருசிலரே.

பெரிது ஆராச் சிறு சினத்தர், சில சொல்லான் பல கேள்வியர், நுண் உணர்வினால் பெருங் கொடையர், கலுழ் நனையான் தண் தேறலர், கனி குய்யான் கொழுந் துவையர், தாழ் உவந்து தழுஉ மொழியர், பயன் உறுப்பப் பலர்க்கு ஆற்றி, ஏமம் ஆக இந் நிலம் ஆண்டோர் சிலரே பெரும! கேள், இனி: நாளும், பலரே, தகையஃது அறியாதோரே, அன்னோர் செல்வமும் மன்னி நில்லாது; இன்னும் அற்று, அதன் பண்பே; அதனால், நிச்சமும் ஒழுக்கம் முட்டிலை; பரிசில் நச்சுவர் கையின் நிரப்பல் ஒம்புமதி, அச்சு வரப் பாறு இறை கொண்ட பறந்தலை, மாறுதகக் கள்ளி போகிய களரி மருங்கின், வெள்ளில் நிறுத்த பின்றைக், கள்ளொடு புல்லகத்து இட்ட சில் அவிழ் வல்சி, புலையன் ஏவப், புல்மேல் அமர்ந்து உண்டு, அழல் வாய்ப் புக்க பின்னும், பலர் வாய்த்து இராஅர் பகுத்து உண்டோரே.

திணையும் துறையும் அவை,

தந்துமாறனைச் சங்கவருணர் என்னும் நாகயைர் பாடியது.