பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/363

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரா.சீ.

363


மகளிரோடு மகிழ்ந்து உரையாடுக அவர்கள் தெளிவான

கள்ளை ஊற்றித் தர அதனை உண்டு மகிழ்க ஆட்டுக் கிடாயின்

சுட்ட இறைச்சியையும், சோற்றையும் வேண்டுபவர்க்கு நல்குக!

பலி ஆடுகள் அவை வெட்டப்படுவது உறுதி; அதுபோல

வாழ்நாள் முடிவு அடைவதும் உறுதியாகும். நிலையாமை அறிந்து உளநாளைப் பயன்பட வாழ்ந்து காட்டுக!

விழுக் கடிப்பு அறைந்த முழுக் குரல் முரசம் ஒழுக்குடை மருங்கின் ஒரு மொழித்து ஆக, அரவு எறி உருமின் உரறுப சிலைப்ப, ஒரு தாம் ஆகிய பெருமையோரும், தம் புகழ் நிறீஇச் சென்று மாய்ந்தனரே, அதனால், அறவோன் மகனே! மறவோர் செம்மால்! நின் ஒன்று உரைப்பக் கேண்மதி: நின் ஊற்றம் பிறர் அறியாது, பிறர் கூறிய மொழி தெரியா, ஞாயிற்று எல்லை ஆள்வினைக்கு உதவி, இரவின் எல்லை வருவது நாடி, உரைத்திசின் பெரும நன்றும் உழவு ஒழி பெரும் பகடு அழி தின்றாங்குச், செங் கண் மகளிரொடு சிறு துனி அளைஇ, அம் கட் தேறல் ஆய் கலத்து உகுப்பக், கெடல் அருந் திருவ! உண்மோ! மடை வேண்டுநர்க்கு இடை அருகாது, அவிழ் வேண்டுநர்க்கு இடைஅருளி விடை வீழ்த்துச் சூடு கிழிப்ப, நீர் நிலை பெருத்த வார் மணல் அடை கரைக், காவுதொறு இழைத்த வெறி அயர் களத்தின் இடங்கெடத் தொகுத்த இடையில்

மடங்கல் உண்மை மாயமோ அன்றே

திணையும் துறையும் அவை, தருமப்புத்திரனைக் கோதமனார் பாடியது.

367. வாழ்த்தியல்

நாடாளும் மன்னர்கள் அவர்கள் தாம் ஆளும் உலகம் மிகப் பெரிது. என்றாலும் அவர்கள் இறக்கும் போது அதனை உடன் கொண்டு செல்வது இல்லை; அதை விட்டு விட்டுத் தான் போக வேண்டும்.