பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரா.சீ.

69


வெய்யிலில் நிலவு விரும்பினாலும், நிலவில் வெய்யில் வேண்டினாலும் விளைவிக்கும் ஆற்றல் உன்பால் உள்ளது.

எதையும் சாதிக்கும் சாதனையாளன் நீ!

இந்த மண்ணில் பிறந்து இங்கு வளர்ந்தவர் யாம்; உன்னைப் புகழ்வதில் சிறப்பு இல்லை.

வேற்று நாட்டுப் பரிசிலர் நீ வாழும் இந்நாட்டை நினைத்துப் பார்க்கின்றனர். துறக்க இன்பம்கூட அவரவர் செய்த நல்வினைகளுக்கு ஏற்ப அமைவது ஆகும். ஈத்து உவக்கும் இன்பத்தைத் துறக்க நாட்டவர் கண்டது இல்லை. ஈவோர் இரப்போர் இருவரும் இருந்தால்தான் ஈகை என்ற நல்லறம் நிலவும். துறக்கத்தில் இல்லாத சிறப்பு உன் நாட்டில் உள்ளது என்பதால் நின் பகைவர் தேசத்தில் வாழ்பவரும் உன் நாட்டையே நினைக்கின்றனர். உனக்கு உரியது இந்நாடு ஆதலின் இதனையே பெரிதும் நேசிக்கின்றனர்.

வரை புரையும் மழ களிற்றின் மிசை, வான் துடைக்கும் வகைய போல, விரவு உருவின கொடி நுடங்கும் வியன் தானை விறல் வேந்தே! நீ உடன்று நோக்கும்வாய் எரி தவழ, நீ நயந்து நோக்கும்வாய் பொன் பூப்பச் செஞ் ஞாயிற்று நிலவு வேண்டினும், வெண் திங்களுள் வெயில் வேண்டினும், வேண்டியது விளைக்கும் ஆற்றலைஆகலின், நின் நிழற் பிறந்து, நின்நிழல் வளர்ந்த எம் அளவு எவனோ மற்றே? இன்நிலைப் பொலம் பூங் காவின் நல் நாட்டோரும் செய்வினை மருங்கின் எய்தல் அல்லதை, உடையோர் ஈதலும் இல்லோர் இரத்தலும் கடவது அன்மையின், கையறவு உடைத்து என, ஆண்டுச் செய் நுகர்ச்சி ஈண்டும் கூடலின், நின்நாடு உள்ளுவர், பரிசிலர் - ஒன்னார் தேஎத்தும், நின்னுடைத்து எனவே, திணை - பாடாண் தினை துறை - இயல்மொழி.

அவன், எம் உள்ளீர்? எம் நாட்டீர்?’ என்றாற்கு ஆவூர் மூலங்கிழார் பாடியது.